குடிபோதையில் விழுந்துகிடந்த முதியவரையும் அவரது ரூ. 22,000 பணத்தையும் காவல் துறையில் ஒப்படைத்த சிறுவர்களை அண்ணா நகர் துணை ஆணையர் சிவ பிரசாத் பாராட்டினார்.
சென்னையில் சமீபத்தில் நிகழ்ந்த விக்னேஷ் என்ற இளைஞரின் லாக்அப் மரணம் பேசு பொருளாக ஆகியுள்ள நிலையில், லாக் அப் மரணங்கள் குறித்து ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி கூறுவதைக் கேட்கலாம்.
ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை கொலை செய்துவிட்டு ரவுடி மதன் இறந்தவரின் சடலத்துடன் செல்பி எடுத்து நண்பர்களுக்கு ஷேர் செய்த கொடூரம் சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.
சேலம் டவுன் பகுதியில் இரண்டு சக்கர வாகனங்கள் அடிக்கடி திருடு போவதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார் வந்த நிலையில் காவல்துறையினர் சேலம் மாநகரில் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.
கஞ்சா குற்றவாளிகளை கைது செய்ய வேண்டிய காவல் ஆய்வாளர் கடத்தல் குற்றவாளிகளோடு சொகுசு ஹோட்டலில் பிரியாணி சாப்பிடும் புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கஞ்சா வியாபாரியோடு பிரியாணி சாப்பிட்ட ஆய்வாளர் பெரியசாமியை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்து தஞ்சை சரக டிஐஜி கயல்விழி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தென்காசி அருகே குத்துக்கல்வலசை ஊராட்சி அய்யாபுரம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை அதே பகுதியைச் சார்ந்த ஒருவர் முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்துள்ளார்.
காவல்துறையால் கைதுசெய்யப்பட்ட தம்பி விக்னேசைக் கொடூரமாகத் தாக்கி, கொன்றொழித்துவிட்டு, உடலை எரித்து செய்தியை மறைப்பதுதான் சமூக நீதியா? திராவிட மாடல் ஆட்சியா? என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.