தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம் திட்டத்தின் மூலம் 9 லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
கொரோனாவுக்கு எதிரான போரில் உயிரைப் பணயம் வைத்து ஈடுபட்ட மினி கிளினிக் மருத்துவர்களைப் பணி நீக்கம் செய்யக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பலமுறை பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாகி பாதிப்படைந்த அந்த இளம் பெண், உதவி கேட்டு சென்ற இடத்திலும் மிரட்டப்பட்டு மீண்டும் பாலியல் வன்புணர்ச்சி செயப்பட்டார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று சமூக நலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் உறுதி அளித்தார். இதனையடுத்து மாற்றுத்திறனாளிகள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
பக்கத்து வீட்டுவாசலில் சிறுநீர் கழித்த விவகாரம் தொடர்பாக ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தேசிய தலைவர் டாக்டர் சுப்பையா சண்முகம் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
தமிழக அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ள உழவர் பட்ஜெட், மாநிலத்தை மட்டுமல்ல, மண்ணையும் காக்கும் பட்ஜெட் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
நகைக்கடன் தள்ளுபடியில் அரசின் நிலைப்பாடு என்ன என்பதைத் தெளிவாக அறிவிக்க வேண்டும் என்றும், தள்ளுபடி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் காத்திருப்போருக்கு ‘நகையை மீட்காவிட்டால் ஏலம் விடப்படும்’ என நோட்டீஸ் அனுப்புவதையும் உடனடியாக நிறுத்தவேண்டும் என்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
திமுக தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள், பட்ஜெட்டில் திட்டங்கள் ஆகுமா? என்று கேள்வி எழுப்பியுள்ள மக்கள் நீதி மய்யம், பட்ஜெட்டில் தமிழக அரசு 13 திட்டங்களைக் குறிப்பிட்டு அவை எப்போது செயலாக்கம் பெறும் என்பதையும் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு பதிவுத்துறை வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த ஆண்டில் ரூ.12,700 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.