தமிழ்நாடு பதிவுத்துறை வரலாற்றிலேயே முதல் முறை; இந்த ஆண்டில் ரூ.12,700 கோடி வருவாய்: அமைச்சர் மூர்த்தி

தமிழ்நாடு பதிவுத்துறை வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த ஆண்டில் ரூ.12,700 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 12, 2022, 09:02 PM IST
  • பதிவுக் கட்டணம் அனைத்தும் இணையவழி நடைமுறைகள் மூலமாகச் செலுத்தும் நடைமுறை
  • எந்த அலுவலர்களுக்கோ அல்லது இடைத்தரகர்களுக்கோ கையூட்டு எதுவும் கொடுக்க வேண்டாம்
  • கையூட்டு கேட்கும் அலுவலர்கள் மீது புகார் தெரிவிக்கலாம்
தமிழ்நாடு பதிவுத்துறை வரலாற்றிலேயே முதல் முறை; இந்த ஆண்டில் ரூ.12,700 கோடி வருவாய்: அமைச்சர் மூர்த்தி  title=

பொதுமக்கள் பத்திரப்பதிவு மேற்கொள்ளும்போது சார்பதிவாளர் அலுவலகத்தில் எந்த அலுவலர்களுக்கோ அல்லது இடைத்தரகர்களுக்கோ கையூட்டு எதுவும் கொடுக்க வேண்டாம் என்றும், அவ்வாறு கையூட்டு கேட்கும் அலுவலர்கள் மீது பதிவுத்துறைத் தலைவர், அரசு செயலாளர் மற்றும் கட்டுப்பாட்டு அறைக்கோ தகவல் தெரிவிக்கலாம்  என்றும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அமைச்சர் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை:

 "தமிழ்நாடு அரசின் பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு நடப்பாண்டில் ரூபாய் 12,700 கோடி அரசுக்கு நிதி வருவாய் கிடைக்கப் பெற்றுள்ளது. அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களில் அரசுக்குச் செலுத்த வேண்டிய பதிவுக் கட்டணம் அனைத்தும் இணையவழி நடைமுறைகள் மூலமாகச் செலுத்தும் நடைமுறைகள் முழுமையாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன. 

 மேலும், சார்பதிவாளர்கள் அனைவரும் அரசால் நிர்ணயக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பீட்டின் படி பத்திரப்பதிவு மேற்கொள்ளவும் மற்றும் வழிகாட்டி மதிப்பீட்டினைக் குறைத்தோ அல்லது அதிகப்படுத்தியோ பத்திரப்பதிவு மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. 

அதேபோல் பத்திரப்பதிவு மேற்கொள்ளும் பொதுமக்களும் அரசால் நிர்ணயக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பீட்டின்படி பதிவு மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும் வழிகாட்டி மதிப்பீட்டினைக் குறைத்து பதிவு செய்தது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு இழப்பு வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

பொதுமக்கள் பத்திரப்பதிவு மேற்கொள்ளும்போது சார்பதிவாளர் அலுவலகத்தில் எந்த அலுவலர்களுக்கோ அல்லது இடைத்தரகர்களுக்கோ கையூட்டு எதுவும் கொடுக்க வேண்டாம் என்றும், அவ்வாறு கையூட்டு கேட்கும் அலுவலர்கள் மீது பதிவுத்துறைத் தலைவர், அரசு செயலாளர் மற்றும் கட்டுப்பாட்டு அறைக்கோ தகவல் தெரிவிக்கலாம் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது." 

இவ்வாறு அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | ஆசிரியர்களின் கூடுதல் பணிச்சுமையை குறைக்க வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

மேலும் படிக்க |  டாஸ்மாக் தருவது மதுவா? விஷமா? மதுப்பிரியர்களை சுரண்டும் தமிழக அரசு!

Trending News