’தாலிக்கு தங்கம் திட்டம்’ - பயனடைந்தவர்கள் இத்தனை பேரா ? | முழுவிவரம் உள்ளே

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம் திட்டத்தின் மூலம்  9 லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளதாக  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. 

Written by - Gowtham Natarajan | Last Updated : Mar 23, 2022, 05:42 PM IST
  • தமிழ்நாடு அரசின் ’தாலிக்கு தங்கம் திட்டம்’
  • 9 லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைந்ததாக தகவல்
  • தகவல் அறியும் உரிமைச் சட்டம் சொன்னது என்ன ?
’தாலிக்கு தங்கம் திட்டம்’ - பயனடைந்தவர்கள் இத்தனை பேரா ? | முழுவிவரம் உள்ளே title=

தமிழகத்தில் ’தாலிக்கு தங்கம் திட்டம்’ கடந்த 2011ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது. முதலில் 4 கிராம் தங்கம் தாலிக்காக வழங்கப்பட்ட நிலையில் 2016 ஆம் ஆண்டிற்குப் பிறகு 8 கிராம் தங்கமாக உயர்த்தி வழங்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் திமுக அரசின் பட்ஜெட்டில் தாலிக்கு தங்கம் திட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில், தாலிக்கு தங்கம் திட்டத்தின் மூலம் பயன் பெற்றவர்கள் குறித்த தகவல்கள் அதோடு பயனாளிகளின் முழு விபரம் ஆகியவற்றை திருநெல்வேலியை சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் பெற்றுள்ளார்.

Talikku tangam

சென்னை முதல் கன்னியாகுமரி வரை இருபத்தி ஒன்பது மாவட்டங்களில் 8 லட்சத்து 70 ஆயிரத்து 478 பேர் பயன் பெற்றுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 80 ஆயிரத்து 912 பேர்; வேலூர் மாவட்டத்தில் 76 ஆயிரத்து 94 பேர்,  குறைந்தபட்சமாகப் பெரம்பலூர் மாவட்டத்தில் 13 ஆயிரத்து 674 பேர் ’தாலிக்கு தங்கம் திட்டம்’திட்டத்தின் மூலம் பயன் பெற்றுள்ளனர் எனத் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

இது குறித்து வழக்கறிஞர் பிரம்மா கூறுகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தனித்தனியாக விண்ணப்பித்து தாலிக்கு தங்கம் திட்டத்தில் பயன் பெற்றவர்கள் விபரம் மற்றும் அவர்களது முழு விலாசம் உள்ளிட்ட தகவல்களை கோரியிருந்தோம்.  அதன் மூலம் தற்போது ஒரு சில மாவட்டங்கள் தவிர பெரும்பாலான மாவட்டங்கள் எத்தனை பேருக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது என்ற விபரம் கிடைத்துள்ளதாக தெரிவித்தார். ஆனால் பயனாளிகளின் முழு விபரத்தையும் அளிக்க எந்த மாவட்டமும் முன்வரவில்லை என்றும் இதன் மூலம் திட்டத்தில் முறைகேடு நடந்து இருக்க வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க | அடுத்தடுத்து வரும் அணைப் பிரச்சினைகள்: என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?

எனவே, தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி தாலிக்கு தங்கம் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகளை கண்டறிய வேண்டும் என்று வழக்கறிஞர் பிரம்மா வலியுறுத்தியுள்ளார். ஈரோடு உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் ’தாலிக்கு தங்கம் திட்டம்’ மூலம் பயனடைந்தவர்கள் குறித்த தகவல்களை அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ஜெயக்குமாரின் மகளை கைது செய்யக்கூடாது - உயர்நீதிமன்றம்..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News