உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்புக்குள்ளாவதற்கு மன அழுத்தமே முக்கிய காரணமாக இருக்கிறது. ஆதலால் மனக்கவலைகளை உருவாக்கும் சிந்தனைகள் உதிக்க ஒருபோதும் இடம் கொடுத்துவிடக்கூடாது. பிரச்சினைகள் துளிர்விட தொடங்கும்போதே மன அழுத்தம் தோன்றுவதற்கு இடம் கொடுக்காதபடி மனதை திசை திருப்பி விட வேண்டும்.
உடற்பயிற்சி உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகச் சிறந்தது. அது உங்களை வலுவானனவராகவும், ஆரோக்கியமானவராகவும் ஆக்குகிறது. அது உங்கள் உடலில் ஏற்படும் சோர்வை அகற்ற உதவுகிறது. நடைபயிற்சி என்பது உடற்பயிற்சிகளில் சிறந்ததும் தேவையான ஒரு பயிற்சியுமாக இருக்கிறது. நடைபயிற்சி உடலுக்கு ஆரோக்கியம் தருவதோடு பலமும் உடலின் வலுவும் அதிகரிக்கச் செய்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.