Penalty For Savukku Shankar: அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறாக ட்வீட் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், இடைக்காலத் தடை உத்தரவை மீறியதாக சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
Senthil Balaji Latest News: கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி பூரண குணமடைய வேண்டி மாரியம்மன் கோவிலில் மொட்டை அடித்தும், அங்க பிரதட்சணம் செய்தும் சிறப்பு பிரார்த்தனை செய்த அவரது ஆதரவாளர்கள்.
மாநில அமைச்சர்கள் நியமனம் மற்றும் அவர்கள் வகிக்கும் இலாகா மாற்றங்கள் குறித்து தீர்மானிக்க வேண்டியது முதலமைச்சரின் அதிகாரமாகும். ஆளுநர் இதில் தலையிட அரசியல் சட்டத்தில் இடம் இல்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
அதிமுகவில் இருந்தபோது ஊழல்வாதியாக இருந்த செந்தில் பாலாஜி, திமுகவில் சேர்ந்து அமைச்சரானதும் புனிதர் ஆகி விட்டாரா? திமுகவின் முதல் குடும்பத்தினருக்கு நெருக்கமானவர் என்பதால் செந்தில் பாலாஜி குற்றமற்றவராகி விடுவாரா? என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.
உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலையை பரிசோதனை செய்ய டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Senthil Balaji Latest Update: அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், இலக்கா மாற்று பரிந்துரைக்கு ஆளுநர் ஆர்.என். ரவி மறுப்பு தெரிவித்தது குறித்து அமைச்சர் பொன்முடி செய்தியாளரை சந்தித்தார்.
Senthil Balaji Latest Update: கைதாகியுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாக்காக்களை வேறு அமைச்சர்களுக்கு மாற்றி தமிழ்நாடு அரசு பரிந்துரைத்த நிலையில், அதை ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்க மறுத்துவிட்டதாக அமைச்சர் பொன்முடி தகவல் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அமலாக்கத்துறையின் மருத்துவர்கள் குழுவும் சிகிச்சையை ஆராயலாம் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Senthil Balaji Case Update: அமைச்சர் செந்தில் பாலஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கப் பிரிவு தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நாளை தள்ளிவைத்துள்ளது.
Senthil Balaji Case: செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த வழக்கு மற்றும் ஜாமீன் மனு மீதான சற்று நேரத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்த வழக்கு மற்றும் ஆட்கொணர்வு மனுவில் இருதரப்பு வாதங்களை இதில் காணலாம்.
CM MK Stalin: "திமுகவையோ திமுகவினரையோ சீண்டிப் பார்த்தால் தாங்க மாட்டீர்கள். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல, எச்சரிக்கை" என முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
Senthil Balaji ED Petiton: செந்தில்பாலாஜி உடல்நிலையை எய்ம்ஸ் மருத்துவர்கள் கொண்டு பரிசோதிக்க வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
Senthil Balaji Prisioner Number: கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு புழல் சிறை கைதிக்கான எண் வழங்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் கைது செய்ய வரும்போது அரசியல்வாதிகளுக்கு நெஞ்சு வலி வருவதை பல தெலுங்கு திரைப்படங்களில் நாம் பார்த்திருப்போம் என செந்தில் பாலாஜி கைது விவகாரம் குறித்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.