அமைச்சர் செந்தில் பாலாஜியை எய்ம்ஸ் மருத்துவக்குழு பரிசோதிக்க வேண்டும் என அமலாக்கத்துறையினர் உயர்நீதிமன்றத்தில் அதிரடி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
செந்தில் பாலாஜி கைது:
தமிழக மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஆகியவற்றின் அமைச்சர் செந்தில் பாலாஜி. இவர், அரசாங்க வேலை வாங்கித்தருவதாக கூறி 120க்கும் மேற்பட்டோரை ஏமாற்றியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டது. இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். செந்தில் பாலாஜியின் கரூர் இல்லத்தில் முன்னர் சோதனை நடத்தப்பட்ட நிலையில் அடுத்து சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் 17 மணி நேரம் சோதனை நடைப்பெற்ற நிலையில், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். பின்னர், அவரை விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்ல அதிகாரிகள் முற்பட்டனர். அப்போது திடீரென செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி வந்ததால், அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து இவரது இதயத்தில் 3 இடங்களில் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் படிக்க | செந்தில் பாலாஜி கைது: கோவையில் கண்டனப் பொதுக்கூட்டம்
பைபாஸ் சர்ஜரி!
செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையொட்டி, அவருக்கு இருதய அறுவை சிகிச்சை (பைபாஸ் சர்ஜரி) நடத்த வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்காக செந்தில் பாலாஜியை ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் அனுமதித்து அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என திமுகவினர் கூறியுள்ளனர். ஆனால், அதற்கு முன்னரே செந்தில் பாலாஜியை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்ப்பதற்கான ஏற்பாடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இறங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
அமலாக்கத்துறையினர் மனு!
செந்தில் பாலாஜியை வேறு மருத்துவமனையில் அனுமதிக்க அவரது குடும்பத்தார் மற்றும் திமுக கட்சியினரின் முடிவு எடுத்திருக்கும் நிலையில், அமலாக்கத்துறையினர் அவர்களுக்கு ட்விஸ்ட் வைக்கும் வகையில் ஒரு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். முன்னரே, தமிழக மருத்துவக் குழு அளித்த அறிக்கையில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று இதுகுறித்த மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் செந்தில் பாலாஜியின் செந்தில் உடல்நிலையை எய்ம்ஸ் மருத்துவர்கள் கண்காணிக்க அனுமதி வழங்குமாறு கேட்கப்பட்டுள்ளது. இதனால், செந்தில் பாலாஜி டெல்லிக்கு அழைத்து செல்லப்படலாம் என கூறப்படுகிறது.
புழலுக்கு செல்கிறாரா செந்தில் பாலாஜி?
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுகள் தகுந்த ஆதரங்களுடன் உறுதிப்படுத்தப்பட்டதால் அவர் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவருக்கான புழல் சிறை கணக்கேடு எண் வழங்கப்பட்டுள்ளது. இதனால் செந்தில் பாலாஜி தங்கியிருக்கும் அறைக்கு வெளியே சுமார் 10 போலீஸார் காவலுக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர். ஓமந்தூரார் மருத்துவமனைக்கும் பயங்கர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்றுவரை செந்தில் பாலாஜிக்கான பாதுகாப்பு பொருப்பில் இருந்த துணை ராணுவத்தினரின் அதை புழல் சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, செந்தில் பாலாஜி உடல் நிலை தேறியவுடன் புழல் சிறையில் அடைக்கப்படலாம் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க | சிறை கன்ஃபார்ம்..? செந்தில் பாலாஜிக்கு புழல் சிறை கைதிக்கான எண் வழங்கப்பட்டது..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ