லோக்சபா காங்கிரஸ் எம்.பி.,க்கள் 6 பேர், 5 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
லோக்சபாவில் இன்று பூஜ்ய நேரத்தின் போது போபர்ஸ் ஊழல் விவகாரத்தை பாஜக எம்.பி.,க்கள் எழுப்பியதை கண்டித்து காங்கிரஸ் எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதற்கு லோக்சபா சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதனால் கோபமடைந்த காங்கிரஸ் எம்.பி.,க்கள் பேப்பரை கிழித்து எறிந்தனர்.
இதனையடுத்து தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு, அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதால் காங்கிரஸ் எம்.பி.,க்கள் 6 பேரையும் 5 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்வதாக சுமித்ரா மகாஜன் தெரிவித்தார்.
நாடு முழுவதும் ஜூலை 1-ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்த நிலையில் இன்று முதல் பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் கூட்டத்தொடரில் பங்கேற்கச் செல்லும் முன் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி:-
ஜிஎஸ்டியின் நோக்கமே (growing stronger together) பலத்தை வளர்ப்பதற்கான ஒற்றுமை என்று கூறியுள்ளார். இதே நம்பிக்கை நடப்பு கூட்டத் தொடரிலும் பிரதிபலிக்கும் என நம்புவதாக பிரதமர் கூறியுள்ளார்.
மேலும் நாடு முழுவதும் பருவநிலை தொடங்கியுள்ளதால் விவசாயிகள் நல்ல சாகுபதி செய்ய வேண்டும் என்று நம்புவதாகவும், பிரார்த்தனை செய்வதாகவும் கூறியுள்ளார்.
பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று கூடியது. இரு அவைகளும் கூடியதும், அமர்நாத் யாத்ரீகர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டத்துடன், தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பார்லிமென்டின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
கடந்த 10-ம் தேதி இரவு அமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 8 யாத்ரீகர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 18 பேர் படுகாயமடைந்தனர்.
பார்லிமென்ட் மழைக்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ளது. இந்த கூட்டம் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது.
கூட்டத்தொடரின் முதல் நாளான நாளை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்க உள்ளது.
இந்த கூட்டத் தொடரில் ஜிஎஸ்டி வரி விதிப்பு, நாட்டின் பாதுகாப்பு, பசுக்கள் விவகாரத்தில் நடைபெறும் தாக்குதல் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
உபி., உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களின் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, ஒடிஸா மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு பாஜக இலக்கு நிர்ணயித்துள்ளது.
பாராளுமன்ற இரு அவைகளிலும் பா.ஜ.க. எம்.பி.க்கள் தவறாமல் ஆஜராக வேண்டும் என மோடி உத்தரவிட்டுள்ளார்.
டெல்லியில் இன்று நடைபெற்ற பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:-
போதுமான உறுப்பினர்களின் எண்ணிக்கை (கோரம்) இல்லாமல் அவை நடவடிக்கைகள் முடங்குவதை தவிர்க்கும் வகையில் பாராளுமன்றகூட்டம் நடைபெறும் போது இரு அவைகளிலும் பா.ஜ.க. எம்.பி.க்கள் தவறாமல் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். பங்கேற்காத எம்.பி.,க்கள் வராததற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும்.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியது.
சைபுல்லாவின் தந்தை முகம்மது சர்தாஜ் செயல்பட்டால் இந்த தேசமும் பாராளுமன்றமும் பெருமைபடுவதாக ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
சைபுல்லாவின் தந்தை முகம்மது சர்தாஜ் செயல்பட்டால் இந்த தேசமும் பாராளுமன்றமும் பெருமைபடுவதாக ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியது.
பாராளுமன்ற கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. பார்லிமென்டில் ஆக்கப்பூர்வமான விவாதம் நடைபெறும் என நம்பிக்கை உள்ளது என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி கூறியதாவது:-
ஜி.எஸ்.டி., மசோதா மீதான தடைகற்கள் விலகும் என்ற நம்பிக்கை உள்ளது. பார்லிமென்டில் ஆக்கப்பூர்வமான
பாராளுமன்ற கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது.
கடந்த மாதம் 9-ம் தேதி பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு முடிவடைந்தது. பார்லிமென்ட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று துவங்கியது. இந்த தொடர் ஏப்ரல் 13-ம் தேதி வரை நடக்க உள்ளது.
இந்த தொடரில் பாராளுமன்ற அவை மற்றும் டெல்லி மேல் சபையில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்புவதற்கு தயார் நிலையில் உள்ளன என தெரிகிறது.பண மதிப்பு நீக்க நடவடிக்கைக் குறித்து 2 அவைகளிலும் விரிவான விவாதம் நடத்தவேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை வைக்க திட்டமிட்டு இருக்கிறது என தெரிகிறது.
பிரதமர் மோடியை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இன்று சந்தித்தார். பணமதிப்பிழப்பால் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த மனுவை பிரதமரிடம் வழங்கினார்.
பிரதமர் மோடியின் ஊழல் சம்பந்தமா சில தகவல் என்னிடம் உள்ளது என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மத்திய மந்திரி கிரண் ரிஜ்ஜூ மீதான குற்றச்சாட்டு, ரூபாய் ஒழிப்பு நடவடிக்கை உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி இன்றும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்றம் முடங்கியது.
இதனையடுத்து ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது அவர் கூறியதாவது:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.