சைபுல்லாவின் தந்தை முகம்மது சர்தாஜ் செயல்பட்டால் இந்த தேசமும் பாராளுமன்றமும் பெருமைபடுவதாக ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியது.
மத்திய பிரதேச மாநிலம் ஜாப்தி ரெயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் காலையில் சென்று கொண்டிருந்த போபால்-உஜ்ஜைனி ரெயிலில் குண்டுவெடித்தது. இதில் பலர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக மத்திய பிரதேச போலீசார் 3 பேரை உடனடியாக கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் முகமது சைபுல்லா என்ற பயங்கரவாதி தங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர், அவரை சரணடையுமாறு வலியுறுத்தினர்.
ஆனால் அவர் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதைத்தொடர்ந்து போலீசார் திருப்பி சுட்டதில் சைபுல்லா கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட சைபுல்லாவின் உடல் தற்போது லக்னோவில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் வைக்கப்பட்டு உள்ளது.
அவரது உடலை வாங்க கான்பூரில் வசித்து வரும் அவரது தந்தை சர்தாஜ் மறுத்து விட்டார். தேச விரோத செயலில் ஈடுபடும் ஒருவன் எனது மகனாக இருக்க முடியாது. அவனது உடலை நாங்கள் வாங்கமாட்டோம் என்று அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், சைபுல்லாவின் தந்தை முகம்மது சர்தாஜ் செயல்பட்டால் இந்த தேசமும் பாராளுமன்றமும் பெருமைபடுவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று மக்களவையில் பேசுகையில் தெரிவித்தார்.
NIA will probe #LucknowTerrorOp, says Home Minister Rajnath Singh in Lok Sabha pic.twitter.com/ZM1S0yV6OO
— ANI (@ANI_news) March 9, 2017
மேலும் பார்லிமென்ட் விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி-யுமான மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது “இந்தியர்களுக்கு எதிரான வன்முறைகள் அமெரிக்காவில் அதிகரித்து வருகின்றன. இந்த விவகாரத்தை அமெரிக்காவின் கவனத்திற்கு கொண்டு சென்று கண்டனம் தெரிவிக்க மோடி தலைமையிலான அரசு தவறிவிட்டது. அமெரிக்காவில் இந்தியர்கள் சுட்டு கொல்லப்படும் விவகாரத்தில் மோடி தொடர்ந்து மவுனம் காக்கிறார். காங்கிரசைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இந்த விஷயத்தில் பிரதமர் தொடர்ந்து மவுனம் காப்பதாக குற்றஞ்சாட்டினர். இந்த பிரச்சினையை அரசு எப்படி சமாளிக்கப்போகிறது? என்பதை தெரியப்படுத்தவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
Such incidents (on attacks on Indians in USA) have increased after the new US President has taken charge: Mallikarjun Kharge,Cong in LS pic.twitter.com/dwskQBa1AG
— ANI (@ANI_news) March 9, 2017
விவாதத்தின் முடிவில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசும்போது, வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதால், இதுகுறித்த விரிவான அறிக்கை அடுத்த வாரம் அமெரிக்க அரசுக்கு அனுப்பப்படும் என தெரிவித்தார்.
Incidents regarding Indians in USA taken very seriously, statement on behalf of GoI to be given in the Parl next week: Rajnath Singh in LS
— ANI (@ANI_news) March 9, 2017