நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக நவம்பர் 3-வது வாரத்தில் துவங்கப்பட்டு டிசம்பர் 3-வது வாரம் வரை நடைபெறும். தற்போது குஜராத் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளதால் நாடாளுமன்றத்தும் குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் மாதம்நடத்துவதாக மத்திய அரசு ஆலோசித்துள்ளது.
இதைத் தொடர்ந்து 'நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை சீர்குலைக்க மத்திய பாஜக அரசு சதி செய்கிறது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விமர்சித்திருந்தார். இதற்கு பாரதீய ஜனதாக் கட்சி பதிலடி கொடுத்தது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 15-ம் தேதி முதல் ஜனவரி 5-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். இக்கூட்டத்தொடரில் முத்தலாக் முறைக்கு எதிரான மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
அதைத் தொடர்ந்து ஜி.எஸ்.டி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் சர்ச்சை எழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.