புதுடெல்லி: பிரதமர் மோடியை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இன்று சந்தித்தார். பணமதிப்பிழப்பால் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த மனுவை பிரதமரிடம் வழங்கினார்.
ராகுலுடன் ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், பஞ்சாப் மாநில தலைவர் அம்ரீந்தர் சிங், மாஜி அமைச்சர் ஆனந்த் சர்மா உள்ளிட்ட பலர் பிரதமரை பாராளுமன்றத்தில் சந்தித்து மாங் பத்ரா சமர்ப்பித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்:-
நாங்கள் பிரதமரை சந்தித்தோம், விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகள் நாட்டில் தற்கொலை செய்து கொள்கிறார்கள், ஒவ்வொரு நாளும் ஒரு விவசாயி பஞ்சாபில் தற்கொலை செய்கிறார்கள். விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.
உத்தரப்பிரதேசத்தில் ராகுல் காந்தி மேற்கொண்ட கிசான் யாத்ரையில் விவசாயிகள் மூன்று கோரிக்கை வைத்தார்கள், கடன் தள்ளுபடி, மின்கட்டண பாதியாக குறைப்பு மற்றும் அவர்கள் செய்யும் உற்பத்திகளுக்கு சரியான விலை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை விடப்பட்டது. விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. கடன் தள்ளுபடி செய்வது குறித்து பிரதமர் உறுதி கூறவில்லை. விவசாயிகள், மோசமான நிலையில் உள்ளதை பிரதமர் ஒப்புக்கொண்டார் எனக்கூறினார்.