பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டம்: ஆக்கப்பூர்வமான விவாதம் பிரதமர் நம்பிக்கை

Last Updated : Mar 9, 2017, 11:40 AM IST
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டம்: ஆக்கப்பூர்வமான விவாதம் பிரதமர் நம்பிக்கை title=

பாராளுமன்ற கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. பார்லிமென்டில் ஆக்கப்பூர்வமான விவாதம் நடைபெறும் என நம்பிக்கை உள்ளது என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி கூறியதாவது:-

ஜி.எஸ்.டி., மசோதா மீதான தடைகற்கள் விலகும் என்ற நம்பிக்கை உள்ளது. பார்லிமென்டில் ஆக்கப்பூர்வமான 

விவாதம் நடைபெற வேண்டும். ஏழைகளுக்கு பயன்தரும் விஷயம் மற்றும் பட்ஜெட் குறித்து விரிவாக விவாதிக்கப்பட வேண்டும். பார்லிமென்டில் நடக்கும் விவாதம் மற்றும் 
ஆலோசனைகள் ஆக்கப்பூர்வமாக இருக்கும் என நம்புகிறேன் என அவர் கூறினார். 

 

 

கடந்த மாதம் 9-ம் தேதி பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு முடிவடைந்தது. பார்லிமென்ட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று துவங்கியது. இந்த தொடர் ஏப்ரல் 13-ம் தேதி வரை நடக்க உள்ளது.

இந்த தொடரில் பாராளுமன்ற அவை மற்றும் டெல்லி மேல் சபையில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்புவதற்கு தயார் நிலையில் உள்ளன என தெரிகிறது.

பண மதிப்பு நீக்க நடவடிக்கைக் குறித்து 2 அவைகளிலும் விரிவான விவாதம் நடத்தவேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை வைக்க திட்டமிட்டு இருக்கிறது என தெரிகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம், ‘நீட்’ தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளித்தல், தமிழக மீனவர் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டது ஆகிய பிரச்சினைகளை அ.தி.மு.க., தி.மு.க. எம்.பி.க்கள் இரு அவைகளிலும் பலமாக எழுப்ப திட்டமிட்டு உள்ளனர்.

திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்கள் அமெரிக்காவில் இந்தியர்கள் தாக்கபடுவதை கண்டித்து பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

எனவே இந்த கூட்டத் தொடரிலும் பாராளுமன்ற 2 அவைகளிலும் கூச்சல் குழப்பம், அமளிக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கலாம்.

 

 

Trending News