புதுடெல்லி: லே லடாக்கின் இயற்கை அழகைப் பார்க்க விருப்பம் உண்டா? ஆனால் விமான கட்டணம், தங்கும் வசதிகள் என பல விஷயங்கள் உங்களை இயற்கையை ரசிக்க தடுக்கிறதா? லே லடாக்கின் இயற்கை அழகைக் காட்ட IRCTC மீண்டும் ஒரு டூர் பேக்கேஜை உருவாக்கியுள்ளது. இந்த சுற்றுப்பயணம் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து தொடங்கும். 7 பகல் மற்றும் 6 இரவுகள் கொண்ட இந்த டூர் பேக்கேஜின். கட்டணம் ஒரு நபருக்கு ரூ 41,500/-லிருந்து தொடங்குகிறது.
லே லடாக்கின் இயற்கை அழகைக் காட்ட ஐஆர்சிடிசி மீண்டும் ஒரு டூர் பேக்கேஜை உருவாக்கியுள்ளது. இந்தப் பயணம் அடுத்த மாதம் செப்டம்பரில் தொடங்குகிறது. இந்த சுற்றுப் பயணம் தொடர்பாக,. IRCTC முழு விவரங்களை வெளியிட்டுள்ளது.
Time to visit Ladakh & enjoy its mesmerizing beauty with IRCTC's tour package for 7D/6N starting at ₹41,500/- pp*. Book this today on https://t.co/U5ds2Pkmlz@AmritMahotsav #AzadiKiRail
— IRCTC (@IRCTCofficial) August 18, 2022
பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு, ஐஆர்சிடிசி அதாவது இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் ஒரு சிறந்த டூர் பேக்கேஜ் திட்டத்தை (IRCTC புதிய டூர் பேக்கேஜ்) உருவாக்ககியுள்ளது. இந்த சிக்கனமான விலை மலிவான டூர் பேக்கேஜில் பல சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும் படிக்க | IRCTC Tour: IRCTC சிறந்த டூர் பேக்கேஜ் அறிமுகம்
இந்த முறை ஐஆர்சிடிசி ஏர் டூர் பேக்கேஜ்கள் ஐஆர்சிடிசியால் டிஸ்கவர் லே லடாக் சுற்றுப்பயணத்திற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுப்பயணம் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து 7 பகல் மற்றும் 6 இரவுகள் தொடங்கும். சுற்றுலாப் பயணிகள் கொல்கத்தாவில் இருந்து கிளம்பி, மீண்டும் ஒரு வாரத்திற்கு பிறகு கொல்கத்தாவில் வந்து சேர்வார்கள்.
ஒரு நபருக்கு ரூ. 41,500/-லிருந்து தொடங்கும் கட்டணத்தில், நீங்கள் வாடகை இடங்களை தேர்வு செய்துக் கொள்ளலாம். இந்த சுற்றுப்பயணத்தில், லே, ஷயாம் பள்ளத்தாக்கு, நுப்ரா, பாங்காங் மற்றும் டார்டக் ஆகியவற்றின் இயற்கை அழகைக் கண்டு ரசிக்கலாம்.
IRCTC, இந்த சுற்றுப்பயணத்தை செப்டம்பர் 11, செப்டம்பர் 17 மற்றும் செப்டம்பர் 23 ஆகிய தேதிகளில் இயக்குகிறது. இதற்காக கொல்கத்தாவில் இருந்து விமானம் புறப்படும். இந்த IRCTC சிறப்பு டூர் பேக்கேஜின் கட்டணத்தில் காலை உணவு, சுற்றிப் பார்ப்பது, இரவு உணவு ஆகியவை அடங்கும்.
மேலும் படிக்க | Old Pension Scheme: மத்திய அரசு அளித்த விளக்கத்தால் ஊழியர்களுக்கு அதிர்ச்சி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ