ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், இந்திய இராணுவம் மற்றும் பி.எஸ்.எப் ஆகியோருடன், பிரதமர் நரேந்திர மோடி, தீபாவளியை கொண்டாடினார்.
இந்திய ராணுவ வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கி தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்!
வீரர்களுடன் பேசிய பிரதமர், தான் தனது குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாட விரும்பியதால், தன் குடும்பமான இந்திய இராணுவ வீரர்களை சந்திக்க வந்ததாக அவர் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, வரும் அக்டோபர் 20-ஆம் தேதி உத்தரகண்ட் மாநிலத்தின் கேதார்நாத் கோவிலுக்கு செல்லவிருக்கின்றார். கடந்த ஐந்து மாதங்களுக்குள், பிரதமர் நரேந்திர மோடி இக்கோவிலுக்கு செல்வது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது!
இப்பயனத்தின் போது அங்குள்ள இராணுவ வீரர்களுடன் பிரதமர் தீபாவளியை கொண்டாடுவார் என எதிர்பார்க்கப் படுகிறது.
செய்தி நிறுவனங்களின் தகவல்களின் படி, சீன எல்லைப் பகுதியில் இருக்கும் இந்திய இராணுவம் மற்றும் இந்திய திபெத்திய எல்லை போலீஸ் (ITBP) படையினர் ஆகியோருடன் பிரதமர் மோடி தீபாவளியினை கொண்டாடுவார் என தெரிகிறது.
மியான்மர் எல்லை பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் அதிரடியாக நுழைந்து நாகா தீவிரவாத அமைப்பினரின் முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பல தீவிவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் இதனால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
Heavy casualties reportedly inflicted on NSCN(K) cadre. No casualties suffered by Indian Security Forces
— EasternCommand_IA (@easterncomd) September 27, 2017
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் யாத்திரிகர்கள் மீது தாக்குதல் நடத்திய லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி அபு இஸ்மாயில் இந்திய பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நொவாம் பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி கொல்லப்பட்டார். யாத்ரீகர்கள் மீதான தாக்குதல் நடத்திய மற்றொரு பயங்கரவாதியும் பாதுகாப்புப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்திய பாதுகாப்பு படைகள் நாட்டின் பிராந்தியங்களை தைரியமாக பாதுகாக்க முடியும் என்று உள்துறை மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
இந்திய-திபெத்திய எல்லைக் காவல்துறை (ITBP) ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற உள்துறை மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேசியதாவது:
நமது பாதுகாப்புப் படைகள் இந்திய எல்லைகளை பாதுகாப்பதற்கான அனைத்து சக்தியையும் கொண்டுள்ளன என்றும், குளிராக இருந்தாலும், வெயிலாக இருந்தாலும் நமது வீரர்கள் சோர்வடைவதில்லை. நமிடம் அத்தகைய தைரியமான துணிச்சலான வீரர்கள் உள்ளனர்.
ரூ 4,168 கோடி செலவில் ஆறு(6) ஏஎச்-64இ அபாச்சீ ஹெலிகாப்டர்களை ராணுவம் வாங்குவதற்கு நீண்டகாலமாக நிலுவையில் இருந்த திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டில், அமெரிக்காவிடம் இருந்து 22 அதிநவீன அபாச்சீ ஹெலிகாப்டர்களையும், 15 சினூக் கனரக லிப்ட் ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கு அமெரிக்க விமானப் போக்குவரத்து நிறுவனமான போயிங் மற்றும் அமெரிக்க அரசாங்கத்துடன் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலர் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டன.
பூடான் எல்லை டோக்லாம் பகுதியை ஒட்டி வசிக்கும் இந்திய கிராம மக்களை வெளியேறும்படி இந்திய ராணுவத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சிக்கிம் பகுதியில் இந்தியாவுக்கு சொந்தமான டோக்லாம் உள்ளது. அது தங்களுக்கு சொந்தம் என சீனா கூறி வருகிறது. இது குறித்து இரு நாடுகள் இடையிலான பிரச்னை தொடங்கி 50 நாள்கள் ஆன நிலையில், இந்தியாவுக்கு சீன ஊடகங்கம் எச்சரிக்கை விடுத்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், எந்நேரமும் போர் வெடிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில் டோக்லாம் எல்லையை ஒட்டியுள்ள நதாங் கிராமத்தில் வசிக்கும் இந்திய மக்களை உடனடியாக வெளியேறும்படி ரானுவத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்திய இராணுவதுறை சார்ந்த தகவல்களை பெற 'ஹம்ராஸ்' எனும் மொபைல் செயலி ஒன்றை இந்திய ராணுவம் உருவாக்கியுள்ளது. இச்செயலி மூலம் இராணுவ வீரர்கள் தங்களது பதவி மற்றும் பதவிஉயர்வு போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளமுடியும்.
இந்த 'ஹம்ராஸ்' செயலி மூலம், வீரர்கள் தங்களது மாத சம்பள பட்டியல், படிவம் 16 போன்றவற்றையும் பதிவிறக்கம் செய்யமுடியும்.
ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் வரவிருக்கும் இந்த செயலியானது இராணுவ பயன்பாட்டின் கீழ் இயங்கும். மேலும் இச்செயலி மூலம் ஜூனியர் ஆணையர் அதிகாரிகள் மற்றும் பிற நபர்களை உடனடியாக தகவல் தொடர்பு கொள்ள முடியும்.
காஷ்மீரின் அனந்தனாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கு பயங்கரவாதிகளுக்கும் இன்று காலை ஏற்பட்ட துப்பாக்கிச்சண்டையில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் தளபதியான பஷீர் லஷ்காரி மற்றும் இந்த இயக்கத்தை சேர்ந்த மற்ற 2 பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டனர்.
காஷ்மீரின் அனந்தனாக் மாவட்டத்தில் உள்ள தாய்ல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்யடுத்து, அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்பொழுது ஒரு வீட்டிற்குள் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
சிக்கிம் எல்லையில் இருந்து இந்திய ராணுவத்தை வாபஸ் பெறாவிட்டால் வரலாற்றில் மறக்க முடியாத பாடம் கற்பிப்போம் என இந்தியாவுக்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிக்கிம் பகுதியில் இந்தியாவுக்கு சொந்தமான டோங்லாங் உள்ளது. அது தங்களுக்கு சொந்தம் என சீனா கூறி வருகிறது. இந்நிலையில், தற்போது அந்த பகுதியில் சாலை அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது. அதற்கு இந்தியாவும், பூடானும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்தியாவிற்கு அல்கொய்தா மிரட்டல் ‘எங்கள் காஷ்மீர் சகோதரர்களை’ கொன்றவர்களே நீங்கள் தான் எங்கள் அடுத்த குறி என கூறியுள்ளது. மிரட்டல் குறித்து அல் கொய்தா ஆவணம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
எங்கள் விதிமுறைகளுக்கு எதிராக உள்ள அனைவரும் எங்களின் தாக்குதல் பட்டியலில் உள்ளனர். இந்திய பாதுகாப்பு படை மற்றும் இந்து மத பிரிவினைவாதிகள் அமைப்பின் தலைவர்கள் அனைவரும் எங்கள் குறி என ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் எங்கள் காஷ்மீர் சகோதரர்களை கொன்ற ராணுவ அதிகாரிகள் அனைவரையும் பழிவாங்குவோம் என கூறியுள்ளனர்.
போர் நடவடிக்கையில் பெண்களை ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளதாக ராணுவ தளபதி பிபின் ராவத் இன்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டி:-
ராணுவத்தில் பெண்களை ஜவான்களாக மாற்றுவது குறித்து ஆராய்ந்து வருகிறேன். இது தொடர்பான நடவடிக்கை விரைவில் துவங்கும். முதலில் ராணுவத்தில் பெண்கள், போலீஸ் ஜவான்களாக பணியமர்த்தப்படுவார்கள். பெண்களை ஜவான்களாக தேர்வு செய்வது குறித்து அரசுடன் ஆலோசனை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பிம்பெர் மற்றும் பட்டால் செக்டாரி அத்து மீறிய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் 5 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் நவ்சேரா பகுதியில் இன்று காலை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிம்பர் மற்றும் பட்டால் பகுதியில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது.
இதில், பாகிஸ்தான் வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 6 வீரர்கள் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தான் முகாம்களும் சேதமடைந்துள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.