இந்திய ராணுவத்துக்கு 6 அதிநவீன ஏஎச்-64இ அபாச்சீ ஹெலிகாப்டர்கள் -மத்திய அரசு ஒப்புதல்

Last Updated : Aug 18, 2017, 10:36 AM IST
இந்திய ராணுவத்துக்கு 6 அதிநவீன ஏஎச்-64இ அபாச்சீ ஹெலிகாப்டர்கள் -மத்திய அரசு ஒப்புதல் title=

ரூ 4,168 கோடி செலவில் ஆறு(6) ஏஎச்-64இ அபாச்சீ ஹெலிகாப்டர்களை ராணுவம் வாங்குவதற்கு நீண்டகாலமாக நிலுவையில் இருந்த திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டில், அமெரிக்காவிடம் இருந்து 22 அதிநவீன அபாச்சீ ஹெலிகாப்டர்களையும், 15 சினூக் கனரக லிப்ட் ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கு அமெரிக்க விமானப் போக்குவரத்து நிறுவனமான போயிங் மற்றும் அமெரிக்க அரசாங்கத்துடன் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலர் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டன.

கடந்த 2 வருடமாக இந்த ஒப்பந்தத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. ஆனால் நேற்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடந்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அபாச்சீ ஹெலிகாப்டர்கள் அதி நவீன தொழில்நுட்பம் கொண்டது. மிகுந்த மேம்பட்ட பன்முக பாணியிலான ஹெலிகாப்டர்களில் ஒன்றாகும். இந்த ஹெலிகாப்டர் அனைத்து காலநிலை ஏற்றவாறும், இரவிழும் துல்லியமாக காட்சியளிக்க கூடிய என பல முக்கிய அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

Trending News