ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், இந்திய இராணுவம் மற்றும் பி.எஸ்.எப் ஆகியோருடன், பிரதமர் நரேந்திர மோடி, தீபாவளியை கொண்டாடினார்.
இந்திய ராணுவ வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கி தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்!
வீரர்களுடன் பேசிய பிரதமர், தான் தனது குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாட விரும்பியதால், தன் குடும்பமான இந்திய இராணுவ வீரர்களை சந்திக்க வந்ததாக அவர் தெரிவித்தார்.
PM Modi said he gets new energy when he spends time among jawans & soldiers. He appreciated their penance & sacrifice, amid harsh conditions pic.twitter.com/Qw6dXWSkZ4
— ANI (@ANI) October 19, 2017
ஜெனரல்கள் மற்றும் வீரர்கள் மத்தியில் நேரத்தை செலவழிக்கும்போது தான் புதிய ஆற்றலைப் பெறுவது போல் உனர்வதாக அவர் தெரிவத்தார்.
மேலும் கடுமையான நிலைமைகளுக்கு மத்தியில், கடும் தவம் புரியும் ராணுவ வீரர்களை பாராட்டியாக வேண்டும் என தெரிவித்தார்.
தனது கடமை முடிந்தபிறகு, ராணுவ வீரர்கள் ஆயுதங்களை விட்டு, சிறந்த யோகா பயிற்றுனர்களாக மாற முடியும் எனவும் தெரிவித்தார்!