தமிழ்நாட்டில் ஆன்லைனில் போதை மாத்திரைகளை விற்கும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து உரிமத்தை ரத்து செய்ய மத்திய சுகாதாரத் துறைச் செயலாளருக்கு தமிழக சுகாதாரத் துறை செயலாளர் சுப்ரியா சாகு கடிதம் எழுதியுள்ளார்.
பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ள நிலையில் இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுப்பதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர்.
மாணவர்கள், இளைஞர்களை ஒட்டுமொத்தமாக சீரழித்து வரும் போதை பொருள் நாசகார சக்திகளை இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் முன்வருவாரா என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
தங்கராஜ் தனது கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, கஞ்சா மற்றும் மதுபானங்களை விற்பனை செய்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றன.
ஐடி ஊழியர் டிப் டாப் உடை அணிந்து கையில் வைத்திருந்த சூட்கேஸ், லேப்டாப் பேக் முழுவதும் கஞ்சாவுடன் கையும் களவுமாக போலீசில் வசமாக சிக்கியுள்ளார். 1.5 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா ஏழு கிலோ விற்பனைக்காக எடுத்து சென்றபோது வாகன சோதனையில் மடக்கி பிடித்த மடிப்பாக்கம் போலீஸ்.
Chennai Drug Injection Death: சென்னை புளியந்தோப்பில் போதை ஊசி செலுத்திக்கொண்டு 26 வயது இளைஞரான கஞ்சா மணி என்பவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
Jaffer Sadiq Arrested: ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த ஜாபர் சாதிக் இன்று கைது செய்யப்பட்டார். தற்போது அவரிடம் டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Jaffer Sadiq: தலைநகர் டெல்லியில் ரூபாய் 2000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.