பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தில் ஏராளமான குடியிருப்புகள் இருந்து வருகிறது சென்னையின் முக்கிய நுழைவாயிலாக விளங்கும் இந்த பகுதியில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ள நிலையில் பொதுமக்கள் வாழ்வதற்கு பாதுகாப்பற்ற பகுதியாக மாறி வருவது அதிர்ச்சிகரமான செயலாக உள்ளது.
குறிப்பாக காட்டுப்பாக்கம் பகுதியில் உள்ள செந்தூர்புரம் மெயின் ரோடு, இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வாலிபர்கள் மாலை மற்றும் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லக்கூடிய பொதுமக்கள் மற்றும் இளம் பெண்களை அச்சுறுத்தும் வகையில் கிண்டல் செய்வது என தொடர்கதையாக நடந்து வருகிறது இதற்கு முக்கிய காரணம் இந்த பகுதியில் கஞ்சா விற்பனையானது அதிக அளவில் நடந்து வருவது அதிகரித்துள்ளது தான்.
குறிப்பாக காட்டுப்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ள நிலையில் இது குறித்து போலீசார் (Tamil Nadu Police) நடவடிக்கை எடுப்பதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். அதற்கு உதாரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகராறு செய்த வாலிபர்களை தட்டி கேட்க சென்ற போலீசாரையே தகராறு செய்த வாலிபர்கள் அடிக்க விரட்டி சென்றதை கூறலாம்.
மேலும் படிக்க | ஒடுக்கத்தூர் சேர்பாடி கிராமத்தில் திருவிழா.. ஓட ஓட அடித்து விரட்டிய போலீசார்
கஞ்சா போதையில் வாலிபர் ஒருவரை நிற்க வைத்து அபாயகரமான முறையில் வாலிபர்கள் சிலர் தாக்கிய வீடியோ காட்சிகளும் சமூக வலைதளத்தில் வைரலானது. கஞ்சா போதையில் போலீஸ்காரர் ஒருவரை வெட்டியதும் இதே பகுதியில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு அடிப்படை வசதிகளுடன் காட்டுப்பாக்கம் வளர்ந்து வந்தாலும் இங்கு வசிக்ககூடிய பொது மக்கள் தங்கள் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலையிலும் தினந்தோறும் அச்சத்துடன் வசித்து வருவது அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. கஞ்சா விற்பனை செய்யும் நபர்கள் யார் என தெரிந்தாலும் பூந்தமல்லி போலீசார் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது இந்த பகுதி மக்களிடைய பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | காதலியை பறித்த நண்பர்... கொலையில் முடிந்த கொடூரம் - அதிர்ச்சிப் பின்னணி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ