2019-20 ஆம் ஆண்டில் ரூ .2,000 மதிப்புள்ள நாணயத்தாள்கள் (Currency notes) அச்சிடப்படவில்லை, மேலும் இந்த நோட்டுகளின் புழக்கம் சில ஆண்டுகளாக குறைந்துவிட்டதாக ரிசர்வ் வங்கியின் (RBI) ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில்லரை மற்றும் ரூபாய் நோட்டுகளை மூலம் கொரொனா தொற்று கிருமி பரவும் என்பதற்கான ஆதாரம் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. ஆனாலும் நாம் அனைவரும் முன்கூட்டியே கவனமாக இருப்பது நல்லது.
சென்னை நாணயவியல் மற்றும் தபால் தலை சங்கத்தின் சார்பில், சென்னையில், நாணயம் மற்றும் தபால் தலை கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் சங்ககால நாணயங்கள், சுதந்திர இந்தியாவின் ஸ்டாம்ப் மற்றும் பண தாள்கள் வைக்கப்பட்டுள்ளது.
ஆக்ஸிஸ் வங்கி கிளையில் 20 போலி நிறுவனங்கள் பெயரில் ரூ. 60 கோடி சிக்கியது.
டெல்லியின் புறநகர் பகுதியான உத்தர பிரதேசத்தில் உள்ள நொய்டாவில் அமைந்துள்ள ஆக்ஸிஸ் வங்கி கிளையில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலியாக உருவாக்கப்பட்ட 20 நிறுவனங்கள் பெயரில் உள்ள வங்கி கணக்குகளில் ரூ. 60 கோடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்று ஏஎன்ஐ செய்தி வெளியிட்டு உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
கர்நாடகாவில் 7 இடை தர்கர்களை அமலாக்கப் பிரிவு கைது செய்து உள்ளது. அவர்களிடம் இருந்து ரூ. 93 லட்சம் மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்ய ப்பட்டது.
ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் போதிய அளவில் புதிய ரூபாய் நோட்டுகள் உள்ளது மக்கள் பீதி அடைய வேண்டாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் மக்கள் பணம் பாதுகாப்பாக இருக்கிறது என்று ஆர்பிஐ கூறியுள்ளது.
500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அதிரடியாக வெளியிட்ட அறிவிப்பு நாட்டையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கருப்பு பணம் மற்றும் சட்ட விரோத பண பரிவர்த்தனைகளை ஒழிக்கும் நோக்கில் மத்திய அரசு பழைய 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனவும், அவற்றை வங்கிகளில் செலுத்தி புதிய ருபாய் நோட்டுகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டது.
இன்று முதல் ஏ.டி.எம்.,கள் செயல்பாடுக்கு வருகின்றன. ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8-ம் தேதி அறிவித்தார். அதையடுத்து ஏடிஎம் இரண்டு நாட்கள்( 9,10-ம் தேதி) இயங்காது என தெரிவிக்கப்பட்டது.
பிரதமர் மோடி 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று திடீரென அறிவித்துள்ளார். கருப்பு பணத்துக்கு எதிராகவும், கள்ள நோட்டுகள் புழக்கத்தை கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரதமர் மோடி கூறியிருந்தார். இந்நிலையில் இந்த முடிவுக்கு பின்னல் ஒரு நபர் உள்ளதாக தகவல் வந்துள்ளது.
அரசாங்கம் மற்றும் தேசிய நலத்திர்காகவே 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் கைவிட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றுக் கொண்டது மத்திய அரசின் நேர்மையான நடவடிக்கையாகும். கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் மட்டுமே கவலைப்பட வேண்டும் என்று மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று பேட்டியில் கூறியுள்ளர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.