OMG... Paytm ஊழியர்களையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்..!

ஹரியானாவின் குருகிராமில் உள்ள Paytm ஊழியர்கள் கொரோனா வைரஸ் அறிகுறிக்கான சோதனை செய்துள்ளனர்!!

Last Updated : Mar 5, 2020, 06:38 AM IST
OMG... Paytm ஊழியர்களையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்..! title=

ஹரியானாவின் குருகிராமில் உள்ள Paytm ஊழியர்கள் கொரோனா வைரஸ் அறிகுறிக்கான சோதனை செய்துள்ளனர்!!

டெல்லி: கொரோனா வைரஸின் பயம் உலகெங்கிலும் உள்ள மக்களைப் பீதியில் ஆழ்த்தியுள்ளது. உலகெங்கிலும் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்ற கொரோனா வைரஸுக்கு இதுவரை சுமார் 92,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிர்கொல்லி நோயாக பாவிக்கப்படும் இந்த வைரஸில் இருந்து தப்பிப்பது அறியாமல் மக்கள் தவித்து வரும் நிலையில், சீனாவில் நிகழ்ந்த ஒரு சம்பவம் ரூபாய் நோட்டுகளிலும் கொரோனா வைரஸ் பரவலாம் என்ற அச்சத்தை தற்போது தூண்டியுள்ளது. இதன் காரணமாக பல கோடி மக்கள் தற்போது செவ்வதறியாது தவித்து வருகின்றன. 

இந்நிலையில், சீனாவிலிருந்து கொரோனா வைரஸ் தொற்றுநோயின் உலகளாவிய விரிவாக்கம் உலகப் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கிறது. மேலும், உலக பொருளாதாரம், வணிகத்தையும் தாக்கியுள்ளது. முதலீட்டாளர்களைத் துன்புறுத்துகிறது மற்றும் உலகெங்கிலும் பல நாடுகளில் பணப்புழக்கத்தின் உலகளாவிய பற்றாக்குறையைத் தூண்டுகிறது. கொடிய கொரோனா வைரஸ் வெடிப்பு உலகளாவிய பொருளாதார வளர்ச்சியை பாதியாக குறைத்து, பல நாடுகளை இந்த ஆண்டு மந்தநிலைக்குள் தள்ளக்கூடும் என்று பல முன்னணி உலக அமைப்புகள் எச்சரித்துள்ளன.

இதை தொடர்ந்து, ஹரியானாவின் குருகிராமில் உள்ள Paytm ஊழியர்கள் கொரோனா வைரஸ் அறிகுறிக்கான சோதனை செய்துள்ளனர். இது குறித்து, புதன்கிழமை வெளியிடப்பட்ட ஒரு நிறுவனத்தின் அறிக்கையில், தங்கள் ஊழியர்களில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக சோதனை செய்துள்ளார்.

கர்நாடகாவின் பெங்களூருவில், ஹைதராபாத்தைச் சேர்ந்த 24 வயதான டெக்கியும் திங்களன்று கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக சோதனை
செய்யப்பட்டார். பெங்களூரில் உள்ள அரசு காந்தி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டி சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுவரை, கொரோனா வைரஸ் அல்லது COVID-19-ன் ஆறு நபருக்கு தோற்று இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. இவர்களில் மூன்று பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள், தில்லி, ஹைதராபாத், ஜெய்ப்பூர் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள். பிப்ரவரியில் கேரள வழக்குகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் டெல்லி, ஹைதராபாத் மற்றும் ஜெய்ப்பூர் நோய்த்தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில், 21 விமான நிலையங்களில் ஆறு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸுக்காக சோதனைக்கு உற்படுத்தபட்டுள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் புதன்கிழமை தெரிவித்தார், பிரதமர் நரேந்திர மோடியுடன் தினசரி நிலைமையை கண்காணிப்பதில் முக்கிய சுகாதார அக்கறையை கையாள்வதில் அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்று வலியுறுத்தினார்.

Trending News