12 வகுப்பு மாணவர்கள் விடைத்தாள் மத்தியில் Rs.500 நோட்டுகள்!

உத்திர பிரதேசம் மாநிலத்தின் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களது விடைத்தாள்களுக்கு மத்தியில் ரூ.500, ரூ100 நோட்டுகளை வைத்துள்ளனர்.

Last Updated : Mar 20, 2018, 08:29 PM IST
12 வகுப்பு மாணவர்கள் விடைத்தாள் மத்தியில் Rs.500 நோட்டுகள்! title=

உத்திர பிரதேசம் மாநிலத்தின் 12-ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி நடைப்பெற்று வருகிறது. விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுப்பட்டுள்ள அசிரியர்கள் தெரிவித்துள்ளதன் படி, மாணவர்கள் தங்களது விடைத்தாள்களுக்கு மத்தியில் ரூ.500, ரூ100 நோட்டுகளை வைத்துள்ளனர்.

இவ்வாறு நடப்பது இது முதல் முறை அல்ல. பறிட்சை தோல்வி பயத்தில் இருக்கும் மாணவர்கள் தங்களை தேர்ச்சி செய்ய வேண்டி விடைத்தாள்களுக்கு மத்தியில் பணம் வைப்பது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் தற்போது உபி மாணவர்கள் மத்தியில் இந்த யுக்தி மீண்டும் தென்பட்டுள்ளது.

உபி மாநிலம் கல்வியில் பின்தங்கிய மாநிலமாக திகழ்ந்து வருகிறது. படிப்பில் பின்தங்கி நிலையில் இருக்கம் மாணவர்கள் இவ்வாறு பணத்தை பயன்படுத்தியும், சிலர் ஆசிரியர்களை மிரட்டியும் தேர்சி பெருவது வழக்கமாகி விட்டது. இதனை தடுக்கும் முயற்சியாக தேர்வு அறைகளில் CCTV கேமிராக்கள் கொண்டு கண்கானிக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனினும், ஆக்ராவில் உள்ள Dr. பீமாராவ் அம்பெத்கர் பல்கலையில் தேர்வின் போது தேர்வு அறையில் இருந்த கண்கானிப்பு கேமிரா செயலிழந்து போனது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. இதுகுறித்து நிற்வாகம் தெரிவிக்கையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இவ்வாறு நடந்ததாக தெரிவிக்கின்றது. எனினும் இச்சம்பவம் குறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது மாணவர்களின் விடைத்தாள்களில் ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப் பட்ட விஷயம் மீண்டும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஆசிரியர்கள் தெரிவிக்கையில் "மாணவர்களின் மதிப்பீட்டின் அடிப்படையிலேயே மதிப்பெண்கள் அளிக்கப்படும்" என தெரிவித்துள்ளனர்.

உபி மாநில SSLC மற்றும் HSC தேர்வகளினை சுமார் 1.46 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இத்தேர்வுகளின் முடிவுகள் வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் வாரத்தில் வெளியாகும் என எதிர் பாரக்கப்படுகிறது! 

Trending News