புதுடெல்லி: 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அதிரடியாக வெளியிட்ட அறிவிப்பு நாட்டையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கருப்பு பணம் மற்றும் சட்ட விரோத பண பரிவர்த்தனைகளை ஒழிக்கும் நோக்கில் மத்திய அரசு பழைய 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனவும், அவற்றை வங்கிகளில் செலுத்தி புதிய ருபாய் நோட்டுகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டது.
இந்தியாவில் தற்போது புழக்கத்தில் இருக்கும் 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததுடன் அவரது டிவிட்டர் பக்கத்தில் 3 லட்சம் பாலோயர்களை மோடி இழந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
டிவிட்டரின் தகவல் படி, இது வரை மோடியை 3,13,312 பேர் டிவிட்டரில் பின்தொடர்வதை நிறுத்தியிருக்கிறார்கள் . எனினும், இதையடுத்து மறுநாளே 4,30,128 பேர் அவரை டிவிட்டரில் பின்பற்றினர்.
இந்திய அளவில் 2.38 கோடி பாலோயர்களை கொண்டுள்ளவர் இந்திய பிரதமர் மோடி. மட்டுமின்றி இதே மாத துவக்கத்தில் இருந்து தினசரி சுமார் 25,000 புது பாலோயர்களை மோடியின் டிவிட்டர் பக்கம் ஈர்த்து வந்துள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.