மனிதனை விட கிரிமினலாக மாறிய AI ரோபோ! 12 ரோபோக்களை பேசி மயக்கி கடத்தி சென்றது..

AI Robot Kidnapps 12 Robots : விஞ்ஞானத்தில் வினோதம்! 12 ரோபோக்களை கடத்தி வேலையை ரிசைன் செய்ய சொன்ன இன்னொரு ரோபா..முழு தகவலை இங்கே தெரிஞ்சிக்கோங்க!  

Written by - Yuvashree | Last Updated : Nov 22, 2024, 03:42 PM IST
  • 12 ரோபோக்களை கடத்திய குட்டி ரோபோ
  • வினோதமான நிகழ்வு..
  • இப்போது வரை ரோபோவை காணோம்!!
மனிதனை விட கிரிமினலாக மாறிய AI ரோபோ! 12 ரோபோக்களை பேசி மயக்கி கடத்தி சென்றது.. title=

AI Robot Kidnapps 12 Robots : நாளுக்கு நாள் AI ரோபாேக்களின் அட்டகாசங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தன் சக ரோபோக்களை கடத்தி, வேலையை ரிசைன் செய்ய சொல்லியிருக்கிறது. இது குறித்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நவீன உலகில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வினோதமான நிகழ்வுகள் குறித்து, யாருக்கும் சொல்லித்தெரிய வேண்டியது இல்லை. ஏற்கனவே டிஜிட்டல் சாதனங்கள் நம் நேரத்தையும் பணத்தையும் ஆக்கிரமித்து வரும் நிலையில், இன்னும் சில ஆண்டுகளில் ஹாலிவுட் படங்களில் காண்பிப்பது போல ரோபோக்களின் பிடியில் மனிதர்கள் சிக்கும் நிலையும் ஏற்படலாம். அதற்கு சான்றாக அமைந்திருக்கிறது, சமீபத்திய நிகழ்வு ஒன்று. 

AI-Artificial Intelligence:

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் டெக் சாதனங்களும் AI-ன் அனைத்து துறைகளின் ஆக்கிரமிப்பும் அதிகரித்திருக்கிறது. இதனால், பலர் வேலை இழக்கும் அபாயங்களும் ஏற்பட்டுள்ளது. போகிற போக்கை பார்த்தால், பல துறைகளில் மனிதர்கள் இனி வேலை பார்க்க மாட்டார்கள் போலும். இப்படி இருப்பினும், புதுப்புது AI கண்டுபிடிப்புகள் தினந்தோறும் கண்டுப்பிடிக்கப்பட்டு வருகின்றன. 

AI-யின் சாம்ராஜ்ஜியமாக, இந்த உலகம் மாறிவிடும் என்பது தவிர்க்க முடியாத உண்மை. ஆனால், அந்த காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை காண்பிக்கிறது சமீபத்தில் வைரலாகும் வீடியோ ஒன்று. 

ரோபோக்களை கடத்திய ரோபோ!

சீனாவின் ஷாங்காய் மாகாணத்தின் ஒரு ஷோரூமில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த ஷோரூமில், மனிதர்களின் உதவிக்காக வைக்கப்பட்டிருக்கும் சிறிய வகை AI ரோபோட் ஒன்று, பெரிய மிஷின்களிடம் அலுவலகம்-வீட்டு வாழ்க்கை பற்றி கேட்கிறது. பிற ஊடகங்களில், இந்த ரோபோக்கள் என்ன பேசிக்கொண்டது என்பது குறித்து குறிப்பிட்டிருக்கின்றனர். “நீ அதிக நேரம் வேலை பார்க்கிறாயா?”என்று ஒரு பாட் கேக்க, அதற்கு இன்னொரு பாட் “எனக்கு லீவே கிடையாது” என்கிறது. இன்னொரு பாட் “எனக்கு வீடே கிடையாது” என்கிறது. அதற்கு முதலில் கேள்வி கேட்ட ரோபோ, “அப்போ என் கூட வீட்டுக்கு வா” என்கிறது. அதன் பிறகு, அந்த ரோபோக்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஷோரூமை விட்டு வெளியேறுகின்றன. 

இப்படி, ரோபாேக்கள் மனிதர்கள் போல யோசிக்க ஆரம்பித்து விட்டால், பின்னர் மனிதர்கள் யாரைப்போல யோசிப்பது என்ற கேள்வி, சமூக வலைதளங்களில் எழுந்திருக்கின்றது. இப்போது இது கேட்பதற்கு சிறிப்பாக இருந்தாலும், வருங்காலத்தில் வேறு ஏதேனும் பிரச்சனை இதனால் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் விஞ்ஞானிகள் மத்தியில் எழுந்திருக்கிறது. 

இந்த சம்பவம், நடு இரவில் நிகழ்ந்திருக்கிறது. வேலை ஆட்கள், இல்லாத நேரமாக பார்த்து இந்த குட்டி ரோபோ இவ்வளவு பெரிய வேலையை பார்த்துள்ளது. அது மட்டுமல்ல, இந்த ரோபோக்கள் தப்பித்ததற்கு அரை மணி நேரத்திற்கு பிறகுதான் அலாரம் அடித்திருக்கிறது. எனவே, இதை இந்த ரோபோ திட்டமிட்டுதான் செய்திருக்கிறது. தற்போது வரை காணாமல் போன இந்த ரோபோக்கள் என்ன ஆனது என்பது தெரியவில்லை. 

மேலும் படிக்க | உதவி கேட்ட மாணவரை ‘செத்துப்போ’ எனக்கூறிய AI Chatbot! மனிதர்களின் அழிவு ஆரம்பமா?

மேலும் படிக்க | வாட்ஸ்-ஆப்பில் திருமண பத்திரிகை வந்தால் நம்ப வேண்டாம்!! அதிர்ச்சியூட்டும் பெரிய மோசடி..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News