ரெய்டு: ஆக்ஸிஸ் வங்கி கிளையில் ரூ. 60 கோடி சிக்கியது

Last Updated : Dec 15, 2016, 02:54 PM IST
ரெய்டு: ஆக்ஸிஸ் வங்கி கிளையில் ரூ. 60 கோடி சிக்கியது title=

ஆக்ஸிஸ் வங்கி கிளையில் 20 போலி நிறுவனங்கள் பெயரில் ரூ. 60 கோடி சிக்கியது.

டெல்லியின் புறநகர் பகுதியான உத்தர பிரதேசத்தில் உள்ள நொய்டாவில் அமைந்துள்ள ஆக்ஸிஸ் வங்கி கிளையில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலியாக உருவாக்கப்பட்ட 20 நிறுவனங்கள் பெயரில் உள்ள வங்கி கணக்குகளில் ரூ. 60 கோடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்று ஏஎன்ஐ செய்தி வெளியிட்டு உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 

முன்பு இதேபோல கடந்த 9-ம் தேதி டெல்லியில் சாந்தினி சவுக் பகுதியில் அமைந்துள்ள ஆக்ஸிஸ் வங்கி கிளையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது 44 போலி வங்கி கணக்குகளில் ரூ.100 கோடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ரூ. 3.5 கோடி புதிய நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.  

இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வங்கி கணக்குகள் வாடிக்கையாளர் பற்றிய விவரங்களில் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்று முதல்கட்ட தகவலில் தெரியவந்தது.

இதைபோல இன்று ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரில் இரண்டு தொழிலதிபரிடம் ரூ 35 லட்சம் புதிய நோட்டுகள் கைப்பற்றபட்டன.

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து மத்திய விசாரணை குழு மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் நாடு முழுவதும் அதிரடி சோதனையை நடத்திவருகின்றன. இதில் கோடி கணக்கான புதிய மற்றும் பழைய ரூபாய் நோட்டுகள் சிக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News