கொரோனா தடுப்பூசி தயாரிப்பில், இந்தியா உலகை வழிநடத்துவதாக பாராட்டிய மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், இதை நினைத்து தான் பெருமிதம் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் COVID-19 க்கு எதிராக அவசரகால பயன்பாட்டிற்காக அஸ்ட்ராஜெனெகா-ஆக்ஸ்போர்டின் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளை DGCI ஞாயிற்றுக்கிழமை அனுமதித்தது.
Co-WIN செயலியில் ஐந்து மாட்யூல்கள் உள்ளன. இவை நிர்வாகி தொகுதி, பதிவு தொகுதி, தடுப்பூசி தொகுதி, பயனாளி ஒப்புதல் தொகுதி, மற்றும் அறிக்கை தொகுதி ஆகியவையாகும்.
இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்காக சீரம், பாரத் பயோடெக் தடுப்பூசிகளை டி.சி.ஜி.ஐ (DCGI) ஒப்புதல் அளித்தது. COVID-19 தடுப்பூசியை அவசர காலத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (DCGI) ஒப்புதல் அளித்தது.
Covishield: அவசரகால மருந்தாக பயன்படுத்த மத்திய அரசுக்கு மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்தது. நேற்று நிபுணர் குழு இதற்கான பரிந்துரையை அளித்திருந்தது
கொரோனா தடுப்பூசி ஒத்திகை நாடு முழுவதும் இன்று முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர் உட்பட ஐந்து இடங்களில் மொத்தம் 17 மையங்களில் இந்த ஒத்திகை நடக்க உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தினமும், கொரோனா தடுப்பூசியின் விலை குறித்து புதிய யூகங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இப்போது புதிய செய்தி என்னவென்றால், சீரம் நிறுவனம் தயாரிக்கும் கொரோனா தடுப்பூசிக்கு இந்தியர்கள் 250 ரூபாய் மட்டுமே விலை கொடுக்க வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது.
தடுப்பு மருந்து சோதனைகளின் போது ஏதேனும் பாதகமான எதிர்விளைவுகள் ஏற்பட்டால் அவற்றை சரியான முறையில் எதிர்கொள்ள SII ஆல் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.
தடுப்பு மருந்து பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர், ஐ.சி.எம்.ஆர், டி.சி.ஜி.ஐ, அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்களுக்கு தடுப்பூசி பரிசோதனை, உற்பத்தி மற்றும் விநியோகத்தை நிறுத்த என்ற நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
COVID-19 தடுப்பூசி தயாரிப்பு நடவடிக்கைகளை மறுஆய்வு செய்ய பிரதமர் மோடி நவம்பர் 28 அன்று புனேவின் சீரம் இன்ஸ்டிட்யூட்டிற்கு (Serum Institute) செல்ல உள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.