புதுடெல்லி: இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்காக சீரம், பாரத் பயோடெக் தடுப்பூசிகளை டி.சி.ஜி.ஐ (DCGI) ஒப்புதல் அளித்தது. COVID-19 தடுப்பூசியை அவசர காலத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (DCGI) ஒப்புதல் அளித்தது.
டி.ஜி.சி.ஐ ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 3) சீரம் இன்ஸ்டிடியூட்டின் கோவிஷீல்ட் (Covishield) மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் (Covaxin) தடுப்பூசிகளை இந்தியாவில் பயன்படுத்த முறையாக ஒப்புதல் அளித்தது.
இந்த செய்தியை தனது அதிகாரபூர்வ டிவிட்டர் கணக்கில் பகிர்ந்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோதி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்,
A decisive turning point to strengthen a spirited fight!
DCGI granting approval to vaccines of @SerumInstIndia and @BharatBiotech accelerates the road to a healthier and COVID-free nation.
Congratulations India.
Congratulations to our hardworking scientists and innovators.
— Narendra Modi (@narendramodi) January 3, 2021
"சீரம் இன்ஸ்டிடியூட் (Serum Intitute) மற்றும் பாரத் பயோடெக் (Biotech) தடுப்பூசிகளை இரண்டு அளவுகளில் நிர்வகிக்க வேண்டும். மூன்று தடுப்பூசிகளையும் 2-8 டிகிரி (2-8° C) செல்சியஸில் சேமிக்க வேண்டும். போதுமான பரிசோதனைக்குப் பிறகு, நிபுணர் குழுவின் பரிந்துரைகளை ஏற்க CDSCO முடிவு செய்துள்ளது. அதன்படி, அவசரகால சூழ்நிலையில் மட்டும் தடுப்பூசிகளை பயன்படுத்துவதற்கு M / s சீரம் மற்றும் M / s பாரத் பயோடெக் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையை நடத்துவதற்கு M / s காடிலா ஹெல்த்கேர் (/s Cadila Healthcare) நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது, ”என்று DCGI வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
Thank you, Hon. @PMOIndia Sri @narendramodi ji, for your support. https://t.co/moE5cuh8XR
— SerumInstituteIndia (@SerumInstIndia) January 3, 2021
இதன் மூலம், முதலில் 1.7 லட்சம் முன்னணி பணியாளர்களுக்கு கோவிட் -19 தடுப்பூசி (Covishield) கிடைக்கும். சுகாதாரப் பணியாளர்களுக்கு முதலாம் கட்டத்தில் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது.
ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசி 'கோவிஷீல்ட்' அவசரகால பயன்பாட்டிற்கு, இந்தியாவின் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (Drug Controller General of India) 10 பேர் கொண்ட நிபுணர் குழு ஒப்புதல் அளித்தது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (Serum Institute of India) தயாரிக்கும் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் தயாரிக்கும் கோவாக்சினின் அவசரகால பயன்பாட்டு ஒப்புதல் வழங்குவது குறித்து ஆலோசிக்க நிபுணர் குழு ஒரு கூட்டத்தை கூட்டியது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | ஆண்டின் முதல் நாளில் WHO வெளியிட்ட சிறந்த செய்தி! இந்தியாவுக்கு முக்கியமான நாள்!
இந்த பரிந்துரையை அடுத்து, கோவிஷீல்டு (Covishield) மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் (Covaxin) தடுப்பூசிகள் இந்தியாவில் (India) விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR