Corona Vaccine ஒத்திகை தமிழகத்தில் இன்று தொடங்கியது

கொரோனா தடுப்பூசி ஒத்திகை நாடு முழுவதும் இன்று  முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர் உட்பட ஐந்து இடங்களில் மொத்தம் 17 மையங்களில் இந்த ஒத்திகை நடக்க உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 2, 2021, 12:03 PM IST
  • Corona Vaccine ஒத்திகை தொடங்கியது
  • தமிழகத்தில் 17 இடங்களில் நடைபெறுகிறது
  • அரசு மருத்துமனையில் பணிபுரியும் மருத்துவர்களும் செவிலியர்களும் ஒத்திகையை மேற்கொள்கின்றனர்
Corona Vaccine ஒத்திகை தமிழகத்தில் இன்று தொடங்கியது title=

சென்னை: கொரோனா தடுப்பூசி ஒத்திகை நாடு முழுவதும் இன்று  முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர் உட்பட ஐந்து இடங்களில் மொத்தம் 17 மையங்களில் இந்த ஒத்திகை நடக்க உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா (Coronavirus) தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள், கட்டுப்பாடுகள் மற்றும் பொது முடக்கங்கள் மூலமாக இந்தியாவில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.

கொரோனா வைரஸ் (Coronavirus) பாதிப்பைத் தடுக்க, தடுப்பூசி (Corona Vaccine) கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

தற்போது கோவேக்சின், கோவிஷீல்டு (Covishield) ஆகிய இரண்டு மருந்துகள் இந்தியாவில் பரிசீலிக்கப்பட்டு, சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு ஆக்ஸ்போர்டு - அஸ்ட்ராஜெனேகாவின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்க பரிந்துரை செய்துள்ளது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தொடர்பான கூடுதல் தகவல்கள் கோரப்பட்டுள்ளது.  

Also Read | இந்தியாவில் SII தடுப்பூசி Covishield அவசர பயன்பாட்டிற்கு பரிந்துரை

இன்னும் சில நாட்களில் தடுப்பூசி இந்தியாவிற்கு (India) கிடைத்துவிடும் என்பதன் அடிப்படையில் தடுப்பூசிகள் போடும் பயிற்சிகளைத் தொடங்க சுகாதார அமைச்சகம் முடிவு செய்தது. அதன் தொடர்ச்சியாக இன்று முதல் நாடு முழுவதும் தன்னார்வளர்களுக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு இந்த ஒத்திகை நடைபெறும்.

CoWin என்ற செயலி மூலம் தடுப்பூசி போடுவதற்கான தகவல்கள் கொடுக்கப்படும். அந்த செயலி மூலம் இந்த ஒத்திகைக்கான தகவல்கள் சரியாக போய் சேர்கிறதா, CoWin செயலி சரியாக செயல்படுகிறதா என்பதும் இன்றைய ஒத்திகையில் சரிபார்க்கப்படும்.

தமிழகத்தில் 17 மையங்களில் ஒத்திகை நடைபெறுகிறது. இரண்டு மணி நேரத்தில் 25 பேருக்கு தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை நடைபெறும். உண்மையில் தடுப்பூசி போடப்படாது. அதற்கான ஒத்திகை தான் நடைபெறும். இந்த தடுப்பூசி சதையில் போடப்படும் ஊசியாக இருக்கும். 

வழக்கமாக காய்ச்சல் போன்ற நோய்களுக்கு போடப்படும் ஊசியாக இருக்கும். தடுப்பூசி போடப்பட்டபிறகு, அரை மணி நேரம் காத்திருப்பு காலத்தில் ஊசி போடப்பட்டவர்கள் கண்காணிக்கப்படுவார்கள். இந்த நடைமுறை அனைத்தும் முறையாக ஒத்திகை பார்க்கப்படும்.

ALSO READ | ஆண்டின் முதல் நாளில் WHO வெளியிட்ட சிறந்த செய்தி! இந்தியாவுக்கு முக்கியமான நாள்!

சென்னை (Chennai) ராஜீவ்காந்தி மருத்துவமனை, சாந்தோம் சுகாதார நிலையங்கள், பூந்தமல்லி அரசு மருத்துவமனை, ஈக்காட்டுத்தாங்கல், நேமம் சுகாதார நிலையம், நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு மருத்துவமனை, உதகை மருத்துவக் கல்லூரி, நெல்லக்கோட்டை சுகாதார நிலையம், சமாதானபுரம் சுகாதார நிலையங்கள், நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ரெட்டியார்பட்டி ஆகிய 17 இடங்களில் இன்று தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை நடைபெறுகிறது. காலை ஒன்பது மணிக்கு

25 நபர்களுடன் முதற்கட்டமாக இன்று காலை 9 மணிக்கு தொடங்கிய தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் ம்ற்றும் செவிலியர்கள் கலந்துக் கொள்வார்கள்.  

3 கட்டங்களாக நடைபெற உள்ள கொரோனா தடுப்பூசி ஒத்திகையில் தமிழகத்தில் முதற்கட்டமாக 5 லட்சம் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும். முதல் கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சுகாதாரத்துறை மேற்கொண்டுள்ளது. 

Also Read | ஜனவரி 2 முதல் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி ஒத்திகை: மத்திய அரசு

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR   

Trending News