இந்தியாவில் கோவிஷீல்ட் COVID-19 தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டிற்கு மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிற்கு (DCGI) நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. இதன் மூலம், முதலில் 1.7 லட்சம் முன்னணி பணியாளர்களுக்கு கோவிட் -19 தடுப்பூசி கிடைக்கும். சுகாதாரப் பணியாளர்களுக்கு முதலாம் கட்டத்தில் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது.
ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசி 'கோவிஷீல்ட்' அவசரகால பயன்பாட்டிற்கு, இந்தியாவின் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் 10 பேர் கொண்ட பொருள் நிபுணர் குழு வெள்ளிக்கிழமை (ஜனவரி 1) ஒப்புதல் அளித்தது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரிக்கும் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் தயாரிக்கும் கோவாக்சினின் அவசரகால பயன்பாட்டு ஒப்புதல் வழங்குவது குறித்து ஆலோசிக்க நிபுணர் குழு ஒரு கூட்டத்தை கூட்டியது குறிப்பிடத்தக்கது.
இந்த பரிந்துரையை அடுத்து, கோவிஷீல்டு தடுப்பூசி இந்தியாவில் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவிஷீல்டு தடுப்பூசியை அடுத்து, பாரத் பயோ டெக் தயாரிக்கும் கோவாக்சின், மற்றும் பைசர் நிறுவன தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டிற்கு நிபுணர் குழு பரிந்துரை வழங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
ALSO READ | ஆண்டின் முதல் நாளில் WHO வெளியிட்ட சிறந்த செய்தி! இந்தியாவுக்கு முக்கியமான நாள்!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR