ரசாயன ஆயுதங்களை மீண்டும் பயன்படுத்தினால் சிரியாவை தாக்க மீண்டும் தயார் நிலையில் உள்ளோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சிரியாவை எச்சரித்துள்ளார்.
முத்தம் என்பது ஒருவர் தன்னுடைய உதடுகளை பிறரது உதடுகள், கன்னங்கள், நெற்றி, கைகள் போன்ற உடல் பாகங்களில் பதிக்கும் அல்லது உரசும் செயல். முத்தமிடுதலுக்கான காரணங்களும் அர்த்தங்களும் பண்பாட்டுச் சூழலைப் பொறுத்து மாறுகின்றன. அன்பு, காதல், பாசம், மதிப்பு, நட்பு என பல வகை உணர்ச்சிகளின் வெளிப்பாடக முத்தம் அமைகிறது. ஆபிரகாமிய மதங்களில் முத்தமிடுதல் சில நேரங்களில் சடங்காகவும் உள்ளது. உலகின் பெரும்பாலான பண்பாடுகளில் இவ்வழக்கம் ஏதேனும் ஒரு வகையில் பின்பற்றப்பட்டாலும், இது இல்லாத பண்பாடுகளும் பல உள்ளன. எ. கா. கீழ் சகாரா, பாலிநீசிய, ஆதி-அமெரிக்க நாகரிகங்களில் சில.
இங்கிலாந்து ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம், ஆயுத தரகருக்கு 10 மில்லியன் யூரோ லஞ்சமாக கொடுத்ததாக தகவல் வந்துள்ளது.
இது தொடர்பாக பிபிசியில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டதாவது:- இந்தியா விமானப்படை பயிற்சிக்காக பயன்படுத்தும் ஹாக் ரக போர் விமானங்களில் இன்ஜின்கள் பொருத்துவது தொடர்பான ஒப்பந்தத்தை பெற, சுதிர் சவுத்ரி என்ற ஆயுத தரகருக்கு 10 மில்லியன் யூரோ பணம் கொடுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்த ஐரோப்பிய யூனியனில் நீடிக்கலாமா? வேண்டாமா? என்ற வாக்கெடுப்பில் பிரதமர் டேவிட் கேமரூன் கருத்துக்கு எதிராக விலக வேண்டும் என்ற கருத்து வெற்றி பெற்றது. ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கு மக்கள் ஓட்டளித்தததால் அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகுவதாக அறிவித்தார்.
பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பிரதமருக்கான கேள்விகள் நிகழ்ச்சியில் கடைசியாக இன்று டேவிட் கேமரூன் கலந்து கொண்டுவிட்டு, பின்னர் அவர் பக்கிங்ஹாம் அரண்மனையில் பிரிட்டிஷ் அரசியை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தைக் கொடுப்பார்.
பிரிட்டனில் கேமரூன், பிரதமர் பதவியில் இருந்து விலக இருப்பதாக அறிவித்துள்ளதை அடுத்து அவருக்கு அடுத்தப்படியாக இருக்கும் மூத்த பெண்மணி தெரசா மே பிரதமராகும் வாய்ப்பு கிட்டியுள்ளது.
ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வேண்டுமா, வேண்டாமா என்ற கருத்தறியும் பொது வாக்கெடுப்பில், இங்கிலாந்தின் பெரும்பான்மையான மக்கள் வெளியேற வேண்டும் என்று வாக்களித்தனர். இது உலக அரங்கில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. கருத்து வாக்கெடுப்பில் 51.9 சதவீதம் பேர் ஆதரவு அளித்ததை தொடர்ந்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுகிறது. மேலும் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலக முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக பல்வேறு நாடுகளும் கருத்து தெரிவித்துள்ளன.
1993-ம் ஆண்டில் ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகள் தங்கள் சமூக, பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு `ஐரோப்பிய யூனியன்` என்ற கூட்டமைப்பை உருவாக்கின. அதில் பிரான்சு, ஜெர்மனி, பெல்ஜியம், இங்கிலாந்து, இத்தாலி, டென்மார்க், போர்ச்சுக்கல் உள்ளிட்ட 28 நாடுகள் இடம்பெற்று உள்ளன. இதில் உள்ள நாடுகள் தங்கள் நாட்டின் எல்லைகளை பிற உறுப்பு நாடுகளுக்கு திறந்து வைத்துள்ளன. உறுப்பு நாடுகள் இந்த அமைப்பில் உள்ள எந்தவொரு நாட்டுக்கும் சென்று வாழலாம்; வேலைவாய்ப்புகளை பெறலாம்; கல்வி கற்கலாம்; தொழில் தொடங்கலாம்.
1993-ம் ஆண்டில் ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகள் தங்கள் சமூக, பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு `ஐரோப்பிய யூனியன்` என்ற கூட்டமைப்பை உருவாக்கின. அதில் பிரான்சு, ஜெர்மனி, பெல்ஜியம், இங்கிலாந்து, இத்தாலி, டென்மார்க், போர்ச்சுக்கல் உள்ளிட்ட 28 நாடுகள் இடம்பெற்று உள்ளன. இதில் உள்ள நாடுகள் தங்கள் நாட்டின் எல்லைகளை பிற உறுப்பு நாடுகளுக்கு திறந்து வைத்துள்ளன. உறுப்பு நாடுகள் இந்த அமைப்பில் உள்ள எந்தவொரு நாட்டுக்கும் சென்று வாழலாம்; வேலைவாய்ப்புகளை பெறலாம்; கல்வி கற்கலாம்; தொழில் தொடங்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.