பிரிட்டன்: இன்று பதவி விலகுகிறார் டேவிட் கேமரூன்

Last Updated : Jul 13, 2016, 01:43 PM IST
பிரிட்டன்: இன்று பதவி விலகுகிறார் டேவிட் கேமரூன் title=

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பிரதமருக்கான கேள்விகள் நிகழ்ச்சியில் கடைசியாக இன்று டேவிட் கேமரூன் கலந்து கொண்டுவிட்டு, பின்னர் அவர் பக்கிங்ஹாம் அரண்மனையில் பிரிட்டிஷ் அரசியை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தைக் கொடுப்பார்.

கடந்த மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் உறுப்பினராகத் தொடர வேண்டுமா என்படு குறித்து நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், தொடரவேண்டும் என்று அவர் எடுத்த நிலைப்பாட்டுக்கு ஆதரவு கிடைக்காததால் பதவி விலகப் போவதாக டேவிட் கேமரூன் அறிவித்தார்.

அடுத்தபடியாக பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பவர் தெரிஸா மே. அவர் திங்கட்கிழமையன்று கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து அவர் இன்று 13-ம் தேதி பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.

தெரசா பிரிட்டனின் 2 வது பெண் பிரதமராவார். இதற்கு முன் கடந்த 1979 முதல் 1990 வரை மார்க்ரெட் தாட்சர் பிரதமராக இருந்துள்ளார்.

Trending News