பிரிட்டனில் கேமரூன், பிரதமர் பதவியில் இருந்து விலக இருப்பதாக அறிவித்துள்ளதை அடுத்து அவருக்கு அடுத்தப்படியாக இருக்கும் மூத்த பெண்மணி தெரசா மே பிரதமராகும் வாய்ப்பு கிட்டியுள்ளது.
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கு மக்கள் ஓட்டளித்தததால் அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகுவதாக அறிவித்தார். இதனையைத்து கன்சர்வேடிவ் கட்சியின் மூத்த நிர்வாகிகளான தெரசா மே மற்றும் ஆண்ட்ரியா லெட்சு இடையே கடும் போட்டி நிலவியது. ஆனால் லெட்சு போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து தெரசா மே கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் நாளை 13-ம் தேதி பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.
தெரசா பிரிட்டனின் 2 வது பெண் பிரதமராவார். இதற்கு முன் கடந்த 1979 முதல் 1990 வரை மார்க்ரெட் தாட்சர் பிரதமராக இருந்துள்ளார்.