ரஜினிகாந்த் பிறந்த நாளில் புதிய கட்சி அறிவிப்பு வெளிவரும் என்று ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்தபோது, “சூழ்நிலை ஏற்பட்டால் அரசியலுக்கு வருவேன். போருக்கு தயாராக இருங்கள்” என்று சூசகமாக அறிவித்ததில் இருந்து தமிழக அரசியல் கட்சிகள் பரபரப்பாகி எதிர்ப்பு, ஆதரவு குரல்கள் எழுப்பி வருகின்றன.
திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் விழா மற்றும் 60 ஆண்டு கால சட்டமன்ற உறுப்பினர் பணியை கவுரவிக்கும் வகையில் சட்டப்பேரவை வைர விழாவும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று மாலை கோலாகலமாக நடைபெற்றது.
விழா மேடை தமிழக சட்டப்பேரவை வடிவில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்த விழாவுக்கு, திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்கினார். கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார். முதன்மை செயலாளர் துரைமுருகன் அனைவரையும் வரவேற்றார்.
திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் சென்னை கோபலபுரத்தில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல், கருணாநிதியின் மகளும், திமுக மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழியும் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இதனிடையே, திமுக தலைவருக்காக தான் எழுதிய பிறந்தநாள் கவிதையை தனது பேஸ்புக் பக்கத்தில் கனிமொழி வெளியிட்டு இருந்தார்.
pic.twitter.com/jCNbfXVtkX
திமுக தலைவர் கருணாநிதியை இன்று அவரது இலத்தில் சந்தித்து அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து, ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின்.
திமுக தலைவர் கருணாநிதி இன்று தனது 94-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி கோபாலபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் மு.க.ஸ்டாலின் அவரை சந்தித்தார்.
கருணாநிதி பிறந்த நாளையொட்டி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், கேரள ஆளுநர் சதாசிவம், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு திமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
கடந்த 1924-ம் ஆண்டு ஜூன் மாதம் 3-ம் தேதி திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் திமுக தலைவர் கருணாநிதி பிறந்தார். இளம் வயது முதல் பொது வாழ்வில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
இன்று அவர் சட்டப்பேரவையில் அடியெடுத்து வைத்து 60 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் விதமாகவும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வைரவிழா:-
தமிழ் சினிமாவின் இசை என்னும் நாடிக்கு உயிர் கொடுத்தவர்களில் முக்கியமானவர் இசைஞானி இளையராஜா.
ஜூன் 2-ம் தேதி 1943-ம் ஆண்டு தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரத்தில் என்ற இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் ராசய்யா. அப்பா ராமசாமி, தாயார் சின்னத்தாயம்மாள். மனைவி ஜீவா. இவருக்கு மூன்று பிள்ளைகள் கார்த்திகேயன், யுவன் ஷங்கர் ராஜா, மற்றும் பவதாரிணி.
இவர் 1961-ம் வருடம் முதல், 1968-ம் ஆண்டு வரை சகோதர்களான பாவலர் வரதராஜன், பாஸ்கரன் மற்றும் கங்கை அமரன் ஆகியோருடன் ஊர் ஊராக சென்று நாடகம் நடத்தி வந்தார்கள்.
காமெடி கிங், மகான், ஆல் இன் ஆல் அழகுராஜா என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் நகைச்சுவை நாயகன் கவுண்டமணி இன்று தனது 78 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.
கவுண்டமணி, தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். பெரும்பாலான திரைப்படங்களில் இவர் நகைச்சுவை நடிகர் செந்திலுடன் இணையாக நடித்திருக்கிறார்.
கவுண்டமணி இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம் வல்லகுண்டாபுரம் கிராமத்தில் பிறந்தார்.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் சிம்புவுக்கு சமுக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், பாடகர் என்று பன்முகம் கொண்ட சிம்பு இன்று தனது 34_வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் நேரிலும், சமூக வலைதளங்களிலும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
#HappyBirthdaySTR என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது. சமிபத்தில் ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து சிம்பு குரல் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்த்துக்களை பார்ப்போம்:-
இன்று இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 50வது பிறந்த நாள் தினம்.
1966-ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி சேகர் - கஸ்துாரி தம்பதியின் மகனாக சென்னையில் பிறந்தார், ரஹ்மானின் இயற்பெயர் திலீப்குமார். இசை பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்தவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்ததன் காரணமாக, குடும்ப பொறுப்பை ஏற்கும் நிலைக்கு ஆளானார். 11 வயதில் இளையராஜா இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்தார். படிப்படியாக முன்னேறி டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாசிக்கல் மியூசிக்கில் பட்டம் பெற்றார்.
விவசாயிகளின் தற்கொலை தொடந்து வரும் நிலையில் அவர்களது துயரை பகிர்ந்து கொள்ளும் வகையில் தம்முடைய பிறந்த நாளை கொண்டாடுவதில்லை என திமுக ராஜ்யசபா எம்பி கனிமொழி அறிவித்துள்ளார்
இன்று நடிகர் ரஜினிகாந்தின் 66-வது பிறந்தநாள் பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான், அக்ஷய் குமார், அபிஷேக் பச்சன் உள்ளிட்டோர் டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இன்று பிறந்தநாள் காணும் ரஜினிகாந்த் நல்ல ஆரோக்கியத்துடனும் மனமகிழ்ச்சியுடனும் வாழ வாழ்த்துகிறேன் என அமிதாப் பச்சன் வாழ்த்தியுள்ளார்.
T 2469 - It is Rajnikant's birthday on Dec 12th and we wish him greater glory happiness and good helath .. pic.twitter.com/hRQRyYZ7Q6
தமிழ் சினிமாவில் "சூப்பர் ஸ்டார்" என அழைக்கப்படும் ரஜினிகாந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த 5-ம் தேதி காலமானார். அதேபோல 7-ம் தேதி மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி அவர்கள் அதிகாலை சென்னையில் காலமானார்.
தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் போஸ்டர்கள், பேனர்கள் வைப்பார்கள். மேலும் அன்னதானம், ரத்ததானம் என நல்ல காரியங்களாக செய்வார்கள்.
தமிழ் சினிமாவில் "சூப்பர் ஸ்டார்" என அழைக்கப்படும் ரஜினிகாந்த் 1950-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி அன்று பிறந்தார். இவர் கர்நாடக மாநிலத்தில் பிறந்தார், இவரது இயர் பெயர் வாஜி ராவ் கெய்க்வாட்.
ராமோஜி ராவ் கெய்க்வாடுக்கும் ரமாபாய்க்கும் நான்காவது குழந்தையாகப் பிறந்தார். இவர் பெங்களூரில் கல்வி கற்றார். படித்து முடித்தவுடன் பெங்களூரில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார்.
இந்த காலகட்டத்தில் ரஜினிகாந்த் அவர்கள் அங்கே பல மேடை நாடகங்களில் பங்கு கொண்ட காரணத்தால் அவரது மனதில் நடிக்கும் ஆவல் வளர்ந்தது.
தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த 5-ம் தேதி காலமானார். அதேபோல 7-ம் தேதி மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி அவர்கள் அதிகாலை சென்னையில் காலமானார். இருவருக்குமே அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் வருகிற 12 ந்தேதி நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாள் வருகிறது. தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் போஸ்டர்கள், பேனர்கள் வைப்பார்கள். மேலும் அன்னதானம், ரத்ததானம் என நல்ல காரியங்களாக செய்வார்கள்.
இன்று பல பரிமாணம் கொண்ட சாதனை நாயகன் கமல்ஹாசன் பிறந்த நாள்
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், பாடலாசிரியர், பாடகர், நடன அமைப்பாளர் என பன்முகப் பரிமாணம் கொண்ட சாதனை நாயகன் கமல்ஹாசன் . 50 வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவிற்கு தொண்டாற்றிய இந்த மகா கலைஞனை பற்றி பார்போம்
1954- ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிறந்தவர். தந்தை வழக்கறிஞர். சென்னை சாந்தோம் பள்ளிகளில் படித்தார்.
1960-ல் களத்தூர் கண்ணம்மா திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.