இசை உலகின் சக்கரவர்த்தி இசைஞானி இளையராஜாவுக்கு பிறந்தநாள்!

Last Updated : Jun 2, 2017, 04:11 PM IST
இசை உலகின் சக்கரவர்த்தி இசைஞானி இளையராஜாவுக்கு பிறந்தநாள்! title=

தமிழ் சினிமாவின் இசை என்னும் நாடிக்கு உயிர் கொடுத்தவர்களில் முக்கியமானவர் இசைஞானி இளையராஜா.

ஜூன் 2-ம் தேதி 1943-ம் ஆண்டு தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரத்தில் என்ற இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் ராசய்யா. அப்பா ராமசாமி, தாயார் சின்னத்தாயம்மாள். மனைவி ஜீவா. இவருக்கு மூன்று பிள்ளைகள் கார்த்திகேயன், யுவன் ஷங்கர் ராஜா, மற்றும் பவதாரிணி. 

இவர் 1961-ம் வருடம் முதல், 1968-ம் ஆண்டு வரை சகோதர்களான பாவலர் வரதராஜன், பாஸ்கரன் மற்றும் கங்கை அமரன் ஆகியோருடன் ஊர் ஊராக சென்று நாடகம் நடத்தி வந்தார்கள்.

இதுவரை 1000 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இளையராஜாவின் புத்தகங்கள்:-

> சங்கீதக் கனவுகள் (ஐரோப்பா பயண குறிப்புகள்)

> வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது (புதுக்கவிதைகள் தொகுப்பு)

> வழித்துணை

> துளி கடல்

> ஞான கங்கா

> பால் நிலாப்பாதை

> உண்மைக்குத் திரை ஏது?

> யாருக்கு யார் எழுதுவது?

> என் நரம்பு வீணை

> நாத வெளியினிலே (வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது, சங்கீதக் கனவுகள், வழித்துணை, இளையராஜாவின் சிந்தனைகள், துளி கடல் ஆகிய புத்தகங்களின் தொகுப்பு)

> பள்ளி எழுச்சி பாவைப் பாடல்கள்

> இளையராஜாவின் சிந்தனைகள்

விருதுகள்:-

> தமிழக அரசின் கலைமாமணி விருது

> மத்திய பிரதேச அரசின் லதா மங்கேஷ்கர் விருது

> கேரள அரசின் விருது

>  அண்ணாமலை பல்கலைக்கழகத்தினாலும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தினாலும் முனைவர் பட்டம் 

> பத்ம பூஷன் விருது.

Trending News