தமிழ் சினிமாவில் "சூப்பர் ஸ்டார்" என அழைக்கப்படும் ரஜினிகாந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த 5-ம் தேதி காலமானார். அதேபோல 7-ம் தேதி மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி அவர்கள் அதிகாலை சென்னையில் காலமானார்.
தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் போஸ்டர்கள், பேனர்கள் வைப்பார்கள். மேலும் அன்னதானம், ரத்ததானம் என நல்ல காரியங்களாக செய்வார்கள்.
இந்நிலையில் ரஜினிகாந்த் தரப்பில் ஒரு வேண்டுகோள் அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- டிசம்பர் 12-ம் தேதி எனது பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம். பேனர்கள், போஸ்டர்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
இன்று 66-வது பிறந்தநாள் காணும் நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில், ‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், நல்ல ஆரோக்கியத்துடன் நீண்டநாள் வாழ வாழ்த்துகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
Happy birthday @superstarrajini! Wishing you a long life filled with good health.
— Narendra Modi (@narendramodi) December 12, 2016