இன்று இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 50வது பிறந்த நாள் தினம்.
1966-ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி சேகர் - கஸ்துாரி தம்பதியின் மகனாக சென்னையில் பிறந்தார், ரஹ்மானின் இயற்பெயர் திலீப்குமார். இசை பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்தவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்ததன் காரணமாக, குடும்ப பொறுப்பை ஏற்கும் நிலைக்கு ஆளானார். 11 வயதில் இளையராஜா இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்தார். படிப்படியாக முன்னேறி டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாசிக்கல் மியூசிக்கில் பட்டம் பெற்றார்.
ஏ.ஆர்.ரஹ்மான். மணிரத்னம் இயக்கத்தில் ரோஜா திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த படம் அவருக்கு முதல் தேசியவிருது வாங்கித் தந்தது. பின்னர் 1997ல் மின்சாரக்கனவும், 2002 லகான் இந்தி படமும், 2003ல் கன்னத்தில் முத்தமிட்டால் படமும் இவருக்கு தேசிய விருகள் வாங்கி தந்தன.
கடந்த, 2008-ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனர் என்ற ஆங்கில படத்திற்கு இசையமைத்தமைக்காக ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்றார். இத்திரைப்பட இசைக்காக இவருக்கு அதே ஆண்டு கோல்டன் குளோப் விருதும், பாஃப்டா விருதும் கிடைத்தன.
அவருக்கு இன்னொரு ஆஸ்கர் விருதை பெற்றுதர வாழ்த்துவோம். இன்று மதியம் 4.30 மணியில் இருந்து 5 மணி வரை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாட உள்ளார்.