அக்டோபர் 18 1978-ம் தேதி ஜோதிகா பிறந்தார். இவர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். ஜோதிகா 1999-ல் வாலி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். குஷி, காக்கா காக்க, மன்மதன், சந்திரமுகி, மொழி படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை நக்மா இவரது சகோதரி ஆவார். நடிகர் சூர்யாவை காதலித்து செப்டம்பர் 11 2006-ம் அன்று திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தியா, தேவ் என்று இரண்டு குழந்தைகள். இவக்குனர் பிரியதர்ஷனால் இந்திய படத்தில் அறிமுகமானார். இவர் மூன்று முறை தமிழக அரசு விருது பெற்றார்.
1931 ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ராமேஸ்வரத்தில் பிறந்தார் இவரது இயற் பெயர் ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம். இவர் இந்தியாவின் 11-வது குடியரசு தலைவராகவும் மற்றும் விண்வெளி பொறியாளராகவும் பணியாற்றினார். அவரது பிறந்த தினமான இன்று இளைஞர்களின் எழுச்சி தினமாக கொண்டாடப்படுகிறது.
டாக்டர் ஏபிஜே அப்துல்கலாமின் 85 வது பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒவ்வொரு இந்தியனின் சிந்தனையையும் கவர்ந்தவர் என்று பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இன்று தனது வீட்டில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தமது 65-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
விஜயகாந்துக்கு மனைவி பிரேமலதா, மகன்கள் சண்முகபாண்டியன், விஜய பிரபாகரன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார்கள். மைத்துனர் எல்.கே.சுதீஷ் மற்றும் குடும்பத்தினர் விஜயகாந்துக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
விஜய் தனது பிறந்த நாளை அவர் தனது 60 வது பட ஷூட்டிங்கில் கொண்டாடினார் என தகவல்கள் வந்தது. ஆண்டு தோறும் விஜய் தன்னுடைய பிறந்த நாள் சென்னையில் கொண்டாடுவார். அதுபோல் ரசிகர்களை சந்தித்தும், பல நலத்திட்ட உதவிகளை நேரடியாக செய்வதையும் கடந்த சில வருடங்களாகவே விஜய் தொடர்ந்து கொண்டிருந்தார். ஆனால் பிறந்த நாளான இன்று தன் குடும்பத்துடன் அமெரிக்கா புறப்பட்டார். அமெரிக்காவில் 15 நாட்கள் குடும்பத்துடன் ஓய்வெடுத்து பின்னர் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று 93-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
அப்போது அவர் கூறியிருப்பதாவது:-
சட்டமன்றத் துறை, நீதித் துறை ,நிர்வாகத் துறை மற்றும் பத்திரிகைகள் துறை என நான்கு தூண்களே மக்களாட்சி எனும் மணி மண்டபத்தைத் தாங்கிக் கொண்டிருக்கின்றன. அந்தத் தூண்கள் எத்தகைய தூய்மையான நோக்கத்தை தாங்கிப் பிடிப்பதற்காக உருவாக்கப்பட்டனவோ அந்த நோக்கங்கள் இந்த நூற்றாண்டில் மிகப் பெரும் சோதனைக்குள்ளாகி சவால்களை எதிர்நோக்கி உள்ளன.
நகைச்சுவை நாயகன் கவுண்டமணி இன்று பிறந்தநாள். அவர் தனது 77 வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.
கவுண்டமணியின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் #hbdgoundamani என்ற ஹெஷ்டேக்கை டிவிட்டரில் உருவாக்கி தங்களது வாழ்த்துகளைப் கூறி வருகின்றனர்.
இது தேசிய அளவில் ட்ரெண்டடித்துக் கொண்டிருக்கிறது.
ஒரு சில வாழ்த்துகளை இங்கே பார்போம்.
சண்முக பிரகாஷ் என்பவர் ''இன்றும் என்றும் எங்களை சிரிக்கவைக்கும் நகைச்சுவை மன்னன்னுக்கு, பிறந்தநாள் வாழ்த்துக்கள்'' என தெரிவித்துருக்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.