சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவாக இருப்பதால் நடிகர் கமல்ஹாசன் பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்க்குமாறு கூறியுள்ளார்.
கடந்த மாதம் செப்டம்பர் 22-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா உடல்நல குறைவால் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருகிறார். தற்போது ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்படுவதாகவும், அவரது உடல் நலம் கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. முதல்-அமைச்சர் நன்றாக பேசுகிறார். அவரது உடல்நிலையில் சீரான முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது
நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்க்குமாறு கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தனது சமுக வலைப்பக்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
நற்பணி இயக்கத் தோழர்கட்கோரரிக்கை. தமிழக முதல்வரின் உடல்நலம் இவ்வாறிருக்க, என் பிறந்தநாள் விழாக்களைத் கண்டிப்பாய்த் தவிர்க்க வேணடுகிறேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) October 23, 2016