பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி) தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் இன்று(வெள்ளிக்கிழமை) ராஜ்ய சபா உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
பா.ஜ.க தலைவர் அமித் ஷா மற்றும் ஸ்மிருதி இரானி இருவரும் இரகசியமாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதன் பிறகு ஸ்மிருதி இரானி, வெங்கையா நாயுடுவின் பாதங்களைத் தொட்டு வணகினார்.
அமித் ஷா மற்றும் ஸ்மிருதி இரானி இருவரும் இந்த மாதா தொடக்கத்தில் குஜராத்தில் இருந்து ராஜ்ய சபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஆர்.ஜே.டி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜாஷ்வி யாதவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதாக கூறி, கடந்த மாதம் பீகார் முதலமைச்சர் பதவியில் இருந்து நிதீஷ் குமார் ராஜினாமா செய்தார். ஜே.டி.யு. மற்றும் ஆர்.ஜே.டி இடையே இருந்த பெரும் கூட்டணியை கலைத்தார். கூட்டணியை கலைத்த சில மணி நேரத்திற்குள் நிதீஷ் பழைய கூட்டாளியான பி.ஜே.பி உடன் புதிய கூட்டணி அமைத்து மீண்டும் முதலமைச்சர் பதவி ஏற்றார்.
கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்த உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இதனையடுத்து அங்கு யோகி ஆதித்யாநாத் முதல் - அமைச்சராக பதவி ஏற்றார். அவர் பதவியேற்றதும், அதிரடியாக பல அறிவிப்புகளும், திட்டங்களும் செயல்படுத்தினார்.
உ.பி., மாநிலத்தில் பாஜக அரசு பதவி ஏற்று 100 நாட்களில் ஆகிவிட்டது. இதனையடுத்து, 100 நாட்களில் ஒவ்வொரு அமைச்சகத்தின் சார்பாக வெளியான அறிவிப்புகள் மற்றும் செய்யப்பட்ட நலத்திட்டப் பணிகள் தொடர்பான சாதனை பட்டியல் அடங்கிய கையேட்டினை யோகி ஆதித்யாநாத் இன்று செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
தற்போது ஜனாதிபதியாக இருக்கும் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் ஜூலை 17-ம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில், நேற்று பாரதீய ஜனதா சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் பெயர் திடீரென்று அறிவிக்கப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக ராம்நாத்கோவிந்த் போட்டியிடுவார் என அமித்ஷா தெரிவித்தார்.
டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரியின் வீடு நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர்களால் சூறையாடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் போது மனோஜ் திவாரி தாக்குதலுக்கு உள்ளான வீட்டில் இல்லையென்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் வட்டாரங்கள், திவாரிக்கு கீழ் பணி புரியும் ஒருவர் கார் விபத்து சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், எதிர் தரப்புக்கும் திவாரியின் பணியாளர் தரப்புக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது. இதையடுத்து, எதிர்தரப்பினர் அவருடைய நண்பர்களுடன் திவாரியின் வீட்டை சூறையாடியுள்ளனர்.
இது குறித்து திவாரி அவரது டிவிட்டரில்:-
உத்தரப்பிரதேச மாநிலத்தை போன்று பாஜக ஆட்சியில் உள்ள பிற 5 மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு தடை விதித்து அதன் கூடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
கடந்த சட்டசபை தேர்தலில் உ.பி.யில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டது. இதே போன்று ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் மாட்டிறைச்சி கூடங்களுக்கு கடந்த திங்கள்கிழமை சீல் வைக்கப்பட்டது.
பாராளுமன்ற இரு அவைகளிலும் பா.ஜ.க. எம்.பி.க்கள் தவறாமல் ஆஜராக வேண்டும் என மோடி உத்தரவிட்டுள்ளார்.
டெல்லியில் இன்று நடைபெற்ற பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:-
போதுமான உறுப்பினர்களின் எண்ணிக்கை (கோரம்) இல்லாமல் அவை நடவடிக்கைகள் முடங்குவதை தவிர்க்கும் வகையில் பாராளுமன்றகூட்டம் நடைபெறும் போது இரு அவைகளிலும் பா.ஜ.க. எம்.பி.க்கள் தவறாமல் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். பங்கேற்காத எம்.பி.,க்கள் வராததற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும்.
உ.பி. உட்பட ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தலுக்கு பிந்தையக் கருத்து கணிப்பு வெளியானது. இந்த கருத்து கணிப்பில் பாரதிய ஜனதாவிற்கு வெற்றி முகம் தெரிகிறது. பஞ்சாபில் முதன் முறையாகப் போட்டியிட்ட ஆம் ஆத்மி மற்றும் அதன் எதிர்கட்சியான காங்கிரஸுக்கும் இடையில் இழுபறி நிலை வெளியாகி உள்ளது.
மேற்கு வங்காளம் மாநிலம் - நேபாளம் எல்லைப்பகுதியில் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்ட ஒரு கும்பலை சேர்ந்த மூன்று பேரை மேற்கு வங்காளம் மாநில போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஒருவயது முதல் 14 வயதுக்குட்பட்ட 17 குழந்தைகளை கடத்தி விற்பனை செய்தது தெரியவந்தது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 4-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினரிடையே மோதல் நிகழ்ந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 403 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், பல கட்டங்களாக, வாக்குப் பதிவு நடத்தப்படுகிறது. இதன்படி, ராய் பரேலி, பண்டல்காண்ட் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 53 தொகுதிகளுக்கு, இன்று 4-ம் கட்டமாக, வாக்குப் பதிவு தொடங்கி, நடைபெற்று வருகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் 69 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கியது. இன்று காலை 7 மணி முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் சட்டப்பேரவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.
11 மாவட்டங்களில் உள்ள 67 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஷரன்பூர், பிஜ்னோர், பரேலி, பிலிபிட், லகிம்புர் கெரி ஆகிய முக்கிய தொகுதிகள் இதில் அடக்கம்.
உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில், முதல்கட்டமாக 73 தொகுதிகளுக்கு நடைபெறும் ஓட்டுப்பதிவு, இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. காலை முதல் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டளித்து வருகின்றனர்.
500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பு வெளியிடப்பட்ட தினத்திலிருந்து (நவம்பர் 8) டிசம்பர் 31 வரை தங்களது வங்கிக் கணக்குகளில் மேற்கொள்ளப்பட்ட பணப் பரிவர்த்தனை குறித்த அறிக்கைகளை ஜனவரி 1-ம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என்று பாஜக எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8-ம் தேதி அறிவித்தார். மேலும் கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் சம்பளம் உயர்வு எதிர்பார்க்க முடியும். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 100 சதவீத சம்பள உயர்வு கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எம்.பி.க்களின் சம்பளத்தை 50000 ரூபாயிலிருந்து 1 லட்ச ரூபாயாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பெல்லாரி நிலக்கரி சுரங்க ஒப்பந்த விவகாரத்தில் ரூ.40 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் பா.ஜ.க கர்நாடக மாநில தலைவர் பி.எஸ்.எடியூரப்பா விடுதலையாகியுள்ளார். வாய்மை வென்றுள்ளது என்று எடியூரப்பா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
தனது பிறந்தநாளையொட்டி இந்திய பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் தனி காரில் சென்று குஜராத் மாநிலம் காந்திநகரில் வசிக்கும் தனது தாய் ஹீராபென் மோடியிடம் ஆசிர்வாதம் பெற்றார்.
मां की ममता, मां का आशीर्वाद जीवन जीने की जड़ी-बूटी होता है। pic.twitter.com/JeEnDrVevU
— Narendra Modi (@narendramodi) September 17, 2016
பாரதீய ஜனதாவில் முக்கியப் பொறுப்புகளை வகிக்கும் தலைவர்கள், 75 வயது நிரம்பியதும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலகி வருகின்றனர். அந்த வகையில் வரும் நவம்பர் மாதத்தில் 75 வயது நிறைவடைய இருக்கும் குஜராத் முதல்வர் ஆனந்திபென் பட்டேல் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை, டெல்லியில் நடைபெற்ற பாஜக ஆட்சிமன்றக் குழுவும் ஏற்றுக் கொண்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.