தேர்தல் ஆணையத்தின் கட்டுபாட்டில் இருக்கும் வாக்குப்பதிவு இயந்திரம் முறைகேடுகள் நடைபெறலாம் என வரும் தகவலால் நான் மிகவும் கவலையடைந்து உள்ளேன் என முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
மராட்டிய மாநிலம், நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி முகாம் நிறைவு விழாவில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்ட பின், அந்த அமைப்பில் சேர விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது!
நான் சொன்னது போலவே ஆர்.எஸ்.எஸ் அமைப்பும்,பாஜகவும் பொய்யான செய்திகளை வெளியிட்டு வருகின்றனர் என்று பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி கூறியுள்ளார்!
25-ம் தேதி ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ராம்நாத் கோவிந்த் பதவியேற்கவுள்ள நிலையில், தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நாளை ஓய்வு பெறுகிறார்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி நம் நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அவர்களது ஆயுள்காலம் வரை அவர்கள் விரும்பும் பகுதிகளில் வாடகை, மின்சாரம் மற்றும் குடீநீர் கட்டணம் இல்லாமல் வீடு வழங்கப்பட வேண்டும். இதற்காக, டெல்லி ராஜாஜி மார்க் பகுதியில் உள்ள பங்களாவில் பிரணாப் முகர்ஜி நாளை குடியேறுகிறார்.
கம்பாலா எருது போட்டிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
கம்பாலா போட்டியில் வெற்றி பெறும் விவசாயிகளுக்கு பரிசுகள், பாராட்டு வழங்கப்படும். 100 ஆண்டுகள் பழமையான இது கர்நாடகாவில் பாரம்பரிய விளையாட்டாக இருந்து வருகிறது.
ஜல்லிக்கட்டு போல, கம்பாலாவுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, கர்நாடக அரசு அவசர சட்ட மசோதாவை அம்மாநில சட்டசபையில் நிறைவேற்றியது. இதனையடுத்து, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த இம்மசோதாவுக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
வரும் 17-ம் தேதி நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்தும், எதிர்கட்சிகள் சார்பில் போட்டியிடும் மீரா குமாரும் இன்று சென்னை வருகின்றனர்.
இருவரும் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள கட்சிகளின் எம்.பி., எம்எல்ஏக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ராம்நாத் கோவிந்த், மீராகுமார் இருவரும் இன்று ஒரே நாளில் சென்னை வருகின்றனர்.
ராம்நாத் கோவிந்த்:
பாராளுமன்ற மைய மண்டபத்தில் நள்ளிரவில் அறிமுக விழா சரக்கு, சேவை வரி அமலுக்கு வந்ததுநாட்டில் முதன் முதலாக, நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிக்க வகை செய்யும் ஜிஎஸ்டி இன்று நள்ளிரவு முதல் அமலானது.
பாராளுமன்றத்தில் நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் பிரதமர் நரேந்திர மோடியும் சேர்ந்து இதனை தொடங்கி வைத்தனர்.
நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி வரியை நாளை(ஜூலை 1-ம் தேதி) முதல் அமல்படுத்தப்படுகிறது.
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்துவதற்காக இன்று நள்ளிரவு பாராளுமன்றத்தில் சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி முன்னிலை வகிக்கிறார். பிரதமர் மோடி ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை தொடங்கி வைத்து பேசுகிறார். அதன் பிறகு நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஜிஎஸ்டி வரி குறித்து விளக்கம் அளிக்க உள்ளார்.
தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 17-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. இன்றுடன் மனு தாக்கல் நிறைவடைகிறது.
தற்போது ஜனாதிபதியாக இருக்கும் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் ஜூலை 17-ம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில், நேற்று பாரதீய ஜனதா சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் பெயர் திடீரென்று அறிவிக்கப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக ராம்நாத்கோவிந்த் போட்டியிடுவார் என அமித்ஷா தெரிவித்தார்.
பீகாரில் ஆளுநராக இருக்கும் ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி வேட்பாளராக அதிகாரபூர்வமாக அறிவிப்பு செய்த பாராதிய ஜனதா கட்சி.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் ஜூலை 17-ம் தேதி நடைபெறுகிறது.
எனவே புதிய ஜனாதிபதியை போட்டியின்றி தேர்ந்து எடுக்க பாஜக விரும்பியது. ஆனால் பாஜக வேட்பாளரை எதிர்த்து காங்கிரஸ் தலைமையில் எதிர்கட்சிகள் சார்பில் போட்டி வேட்பாளர் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. இதையடுத்து, அந்த பதவிக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான வேட்பாளர் அறிவிப்பை விரைவில் பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளியிடுகின்றன.
இந்நிலையில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, இன்று காஞ்சிபுரம் வருகிறார். அரக்கோணம், 'ராஜாளி' கடற்படை தளத்தின் விமான தளத்தில் இருந்து, கார் மூலம் காஞ்சிபுரத்திற்கு, பகல், 2:00 மணிக்கு வருகிறார்.
திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் விழா மற்றும் 60 ஆண்டு கால சட்டமன்ற உறுப்பினர் பணியை கவுரவிக்கும் வகையில் சட்டப்பேரவை வைர விழாவும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று மாலை கோலாகலமாக நடைபெற்றது.
விழா மேடை தமிழக சட்டப்பேரவை வடிவில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்த விழாவுக்கு, திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்கினார். கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார். முதன்மை செயலாளர் துரைமுருகன் அனைவரையும் வரவேற்றார்.
திமுக தலைவர் கருணாநிதியை இன்று அவரது இலத்தில் சந்தித்து அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து, ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின்.
திமுக தலைவர் கருணாநிதி இன்று தனது 94-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி கோபாலபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் மு.க.ஸ்டாலின் அவரை சந்தித்தார்.
கருணாநிதி பிறந்த நாளையொட்டி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், கேரள ஆளுநர் சதாசிவம், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு திமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
கடந்த 1924-ம் ஆண்டு ஜூன் மாதம் 3-ம் தேதி திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் திமுக தலைவர் கருணாநிதி பிறந்தார். இளம் வயது முதல் பொது வாழ்வில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
இன்று அவர் சட்டப்பேரவையில் அடியெடுத்து வைத்து 60 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் விதமாகவும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வைரவிழா:-
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது. இதனால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதில் ஆளும் பாஜக-வும், எதிர்கட்சிகளும் இறங்கி உள்ளன.
மாநில கட்சிகளை இணைத்து, பாஜக-வுக்கு எதிரான கூட்டணி அமைத்து, அதன் சார்பில் பொது வேட்பாளை முடிவு செய்வதற்காக காங்கிரஸ் தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது.
குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தனி விமானம் மூலம் கோவை வந்த பிரதமர் ஹெலிகாப்டர் மூலம் உதகை சென்றார். பிரணாப் முகர்ஜியை விமான நிலையத்தில் உள்ளாட்சி அமைச்சர் வேலுமணி, ஆட்சியர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
உதககையில் உள்ள லாரன்ஸ் பள்ளியின் 159-வது ஆண்டு விழா இன்று நடைப்பெறுகிறது. இந்த பள்ளியின் ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று உதகை வந்தடைந்துள்ளார். பிரணாப் முகர்ஜி வருகையை ஒட்டி உதகையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.