ஜனாதிபதி தேர்தல்: பாஜ., வேட்பாளருக்கு ஆதரவா? இல்லையா? சிவசேனா இன்று அறிவிப்பு

Last Updated : Jun 20, 2017, 10:10 AM IST
ஜனாதிபதி தேர்தல்: பாஜ., வேட்பாளருக்கு ஆதரவா? இல்லையா? சிவசேனா இன்று அறிவிப்பு title=

தற்போது ஜனாதிபதியாக இருக்கும் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் ஜூலை 17-ம் தேதி நடைபெறுகிறது. 

இந்நிலையில், நேற்று பாரதீய ஜனதா சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் பெயர் திடீரென்று அறிவிக்கப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக ராம்நாத்கோவிந்த் போட்டியிடுவார் என அமித்ஷா தெரிவித்தார். 

இதன்பிறகு பா.ஜ.கவின் கூட்டணி கட்சியான சிவசேனா நேற்று அவசர கூட்டம் நடத்தியது. தேசிய ஜனநாயாக கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ராம்நாத்கோவிந்திற்கு ஆதரவு அளிப்பதா? இல்லையா? என்ற முக்கிய முடிவை இன்று சிவசேனா அறிவிக்க உள்ளது.

ஒட்டுமொத்த நாட்டு மக்களின் நலன்கள் சார்ந்தவராக இருக்க வேண்டும் என உத்தவ் தாக்ரே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News