புதுடெல்லி: பாராளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் சம்பளம் உயர்வு எதிர்பார்க்க முடியும். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 100 சதவீத சம்பள உயர்வு கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எம்.பி.க்களின் சம்பளத்தை 50000 ரூபாயிலிருந்து 1 லட்ச ரூபாயாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
எம்.பி.,க்களின் சம்பளம் தொடர்பாக பா.ஜ.க. எம்.பி. யோகி ஆதித்யநாத் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு பல ஆய்வுக்கு பின்னர் எம்.பி.களின் சம்பளத்தை உயர்த்த பரிந்துரை செய்துள்ளது. இந்த குழு அறிக்கையை மத்திய அரசு ஆய்வு செய்த பின்னர் ஒப்புதலுக்காக பிரதமர் அலுவலகம் அனுப்பி வைக்கப்பட்டது.
தற்போது, ஜனாதிபதியின் சம்பளத்தையும் 1.5 லட்சத்திலிருந்து 5 லட்சமாகவும், கவர்னரின் சம்பளத்தை 1.10 லட்சத்திலிருந்து 2.5 லட்சமாகவும் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.