குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் மீது மாநிலங்களவையில் பேசிய பிரதமர் மோடி, மக்களவையில் எனது பேச்சை கேட்க யாரும் தயாராக இல்லை என்றார்.
ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நேற்று விவாதம் தொடங்கியது. அந்த விவாதத்துக்கு மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றி வருகிறார்.
பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி) தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் இன்று(வெள்ளிக்கிழமை) ராஜ்ய சபா உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
பா.ஜ.க தலைவர் அமித் ஷா மற்றும் ஸ்மிருதி இரானி இருவரும் இரகசியமாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதன் பிறகு ஸ்மிருதி இரானி, வெங்கையா நாயுடுவின் பாதங்களைத் தொட்டு வணகினார்.
அமித் ஷா மற்றும் ஸ்மிருதி இரானி இருவரும் இந்த மாதா தொடக்கத்தில் குஜராத்தில் இருந்து ராஜ்ய சபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்றதை அடுத்து முதல் மந்திரியாக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றுக்கொண்டார்.
யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றது முதல் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டத்தின் போது, 35,359 கோடி மதிப்பிலான விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதற்கான அதிரடி வெளியிட்டார்.
இந்த நிலையில், யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசின் இரண்டாவது அமைச்சரவை கூட்டம்
நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவது குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி புறநகர் பகுதியான காசியாபாத்தில்(உத்தர பிரதேச மாநிலம்) பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் பிரிஜ்பால் டியோட்டியா தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மர்ம நபர்கள் அதிநவீன ஏகே-47 ரக எந்திர துப்பாக்கியை கொண்டு பிரிஜ்பால் டியோட்டியா சுட்டனர்.
உத்தரபிரதேச மாநில பாரதீய ஜனதா கட்சி துணைத்தலைவர் தயாசங்கர் சிங், அங்குள்ள மாவ் நகரில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதியை சரமாரியாக சாடினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.