ரூபாய் நோட்டு ஒழிப்பால் தீவிரவாதிகளின் முதுகு எலும்பு உடைந்தது- மோடி

உத்தர்காண்ட் மாநிலம் டேராடூனில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி. 

Last Updated : Dec 28, 2016, 08:52 AM IST
ரூபாய் நோட்டு ஒழிப்பால் தீவிரவாதிகளின் முதுகு எலும்பு உடைந்தது- மோடி title=

டோராடூன்: உத்தர்காண்ட் மாநிலம் டேராடூனில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி. 

உத்தரகண்ட் தலைநகர் 'பரிவர்த்தன் பேரணி' உரையாற்றும் போது, பிரதமர் தெரிவித்தார்: "நவம்பர் 8-ம் தேதி எடுக்கபட்ட ஒரு நடவடிக்கை மூலம், பயங்கரவாதம், போதை மருந்து கடத்தல், மற்றும் போலி குறிப்பு கடத்தல் அழிக்கப்பட்டுவிட்டன.

பழைய ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்ததால் பயங்கரவாதி, போதை மருந்து மற்றும் போலி நாணய கடத்தல், மனித கடத்தல் செய்பவர்களின் முதுகு எலும்பு உடைந்தது போல ஆனது.

சர்தாம் நெடுஞ்சாலையை திறந்து வைப்பது உத்தரகாண்ட் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு செலுத்தும் அஞ்சலி ஆகும்.

முந்தைய அரசு யாத்திரை வருபவர்களுக்கு எந்த வசதியையும் ஏற்படுத்தவில்லை. சிறந்த போக்குவரத்து வசதியை ஏற்படுத்துவதை அரசு இலக்காக வைத்துள்ளது. 

நான் தவறான வாக்குறுதிகள் எதையும் அளிக்கவில்லை. நான் சொன்னது எதையும் மறக்கவில்லை. 18,000 கிராமங்களுக்கு மின்சாரம், காஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 

கடந்த சில ஆண்டுகளாக ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை  முன்னாள் ராணுவ வீரர்கள் கோரி வந்தனர். ஆனால் முந்தைய அரசு எதையுமே செய்யவில்லை. முதல் நாளில் இருந்தே முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டம் உண்மையாகும் என்று கூறி வருகிறோம்.

கருப்பு பணம் நாட்டை சீரழித்து வருகிறது, கருப்பு பண பதுக்கல்காரர்களுக்கு எதிராக நாங்கள் போராடி வருகிறோம்.
ஊழல் செய்பவர் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று நாங்கள் கூறியிருந்தோம். தற்போது அது நடைபெறுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

Trending News