இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் - ஆஸ்திரேலியா மோதும் பயிற்சி ஒருநாள் போட்டி, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கி உள்ளது. ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்றது. அதன்படி ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி-20 போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு வந்துள்ளது.
முதல் ஒரு நாள் போட்டி வரும் செப்டம்பர் 17-ம் தேதி சென்னை சேப்பாக்கக்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது.
இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சென்னை வந்தனர்.
இந்திய கிரிகெட் அணிக்கு எதிராக 5 ஒருநாள், 3 T20 ஓவர் போட்டிகளில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பங்கேற்கிறது. இந்த தொடர் வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய கிரிகெட் அணி வீரர்கள் நேற்று இரவு சென்னை விமானநிலையம் வந்தடைந்தனர்.
இங்கிலாந்தில் நடந்து வரும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் போட்டியில் இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலிய அணியும் மோதின.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி தனது பேட்டிங்கை தொடங்கியது. இந்திய அணியில் பூனம் ராவ்த் சிறப்பாக விளையாடி சதத்தை பூர்த்தி செய்தார். அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் 69 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மேலும், இன்றையப் போட்டியில் உலக பெண்கள் கிரிக்கெட்டில் 6,000 ரன்களைக் கடந்த முதல் வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
சாம்பியன்ஸ் டிராபி 2017 ஏ பிரிவு போட்டியில் ஆஸ்திரேலியா அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தியது.
முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஹெட் 71 ரன்களும், பின்ச் 68 ரன்களும், சுமித் 56 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணியில் அபாரமாக பந்து வீசிய மார்க் வுட் மற்றும் ரஷீத் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.
ஆஸ்திரேலியா மெல்போர்னியாவில் விமானம் வணிக வளாகத்தில் மோதி வெடித்து சிதறியதில் 5 பேர் பலியானார்.
மெல்போர்னில் உள்ள எசண்டன் விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய இரண்டு இன்ஜின்கள் கொண்ட பீச்கிராப்ட் சூப்பர் கிங் என்ற சிறிய விமானம் கிளம்பியவுடன், விமான நிலையம் அருகில் உள்ள வணிக வளாகம் மீது மோதி வெடித்து சிதறியது. இதில் விமானத்தில் இருந்த 5 பேர் பலியானார்கள். மீட்புப்படையினர் விரைந்து மீட்பு பணிகளை கவனித்து வருகின்றனர்.
வணிக வளாகத்தில் இருந்த சிலர் காயமடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக முதல் இரண்டு போட்டிக்கான 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நான்கு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.வருகிற 17-ம் தேதி மும்பையில் ஆஸ்திரேலிய அணி மற்றும் இந்திய ‘ஏ’ அணி பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது. ஆஸ்திரேலிய அணி நேற்று மும்பை வந்தது. தெற்கு மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஆஸ்திரேலிய அணியினர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
முதலாவது டெஸ்ட் போட்டி புனேயில் பிப்., 23-ம் தேதி
2-வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் மார்ச் 4-ம் தேதி
முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் மைதானத்தில் நடந்து வந்தது. இதில் முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 242 ரன்களும், ஆஸ்திரேலியா 244 ரன்களும் எடுத்தன.தனது 2_வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்கா அணி 540 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
லண்டனில் கடந்த 10-ம் தேதி தொடங்கியது சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி, பெல்ஜியம், தென் கொரியா என 6 அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டியில் தகுதி பெற்ற ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதின.
சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி தோற்றது. ஆனால் புள்ளிகளின் அடிப்படையில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.