ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு

Last Updated : Feb 14, 2017, 03:47 PM IST
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு   title=

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக முதல் இரண்டு போட்டிக்கான 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி  நான்கு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.வருகிற 17-ம் தேதி மும்பையில் ஆஸ்திரேலிய அணி மற்றும் இந்திய ‘ஏ’ அணி பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது. ஆஸ்திரேலிய அணி நேற்று மும்பை வந்தது. தெற்கு மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஆஸ்திரேலிய அணியினர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

முதலாவது டெஸ்ட் போட்டி புனேயில் பிப்., 23-ம் தேதி

2-வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் மார்ச் 4-ம் தேதி

3-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் மார்ச் 16-ம் தேதி

4-வது டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் மார்ச் 25-ம் தேதி தொடங்குகிறது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடருக்கான இந்திய அணியின் தேர்வு மும்பையில் இன்று நடைபெற்றது. தேர்வு குழுவினர் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக முதல் இரண்டு போட்டிக்கான 16 பேர் கொண்ட அணியை தேர்வு செய்து அறிவித்தனர். வங்காளதேச அணிக்கெதிராக விளையாடிய அதே அணிதான் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய அணி:

விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், லோகேஷ் ராகுல், புஜாரா, ரகானே, சகா, அஸ்வின், ஜடேஜா, இசாந்த் ஷர்மா, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், கருண் நாயர், ஜயந்த் யாதவ், குல்தீப் யாதவ், அபிநவ் முகுந்த், ஹர்திக் பாண்டியா.

 

 

 

ஆஸ்திரேலிய அணி:

ஸ்டீவன் சுமித் (கேப்டன்), டேவிட் வார்னர், மேத்யூ ரென்ஷா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹோன்ட்ஸ்கோம்ப், மிட்செல் மார்ஷ், மேத்யூ வேட், ஸ்டீன் ஓகீபே, மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஹேசில்வுட், ஆஷ்டன் அகர், உஸ்மான் கவாஜா, ஜாக்சன் பிர்ட், மிட்செல் செப்சன், மேக்ஸ்வெல். 

Trending News