சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான பொது விவாதம் நடந்தது. இதில் பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் நரசிம்மன், “முன்னாள் முதல் - அமைச்சர் கருணாநிதி பெயரை குறிப்பிட்டு பேசி னார்.இதற்கு தி.மு.க. உறுப் பினர்கள் ஒட்டு மொத்தமாக எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
உடனே சபாநாயகர் குறுக்கிட்டு: தி.மு.க. உறுப்\பினரின் பெயரை மாண்புமிகு கருணாநிதி என்று மரியாதையுடன்தான் குறிப்பிட்டார். இதில் தவறு ஒன்றும் இல்லை என்றார்.
உடனே துரைமுருகன் எழுந்து: முதல்-அமைச்சர் பெயரை நாங்கள் குறிப்பிட்டு பேசலாமா? என்றார்.
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக 6-வது முறையாக ஜெயலலிதா பதவியேற்றார். அவர் மீண்டும் முதல்வராக பதவியேற்ற பின்னர் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும்.
தமிழக சட்டப்பேரவையின் அடுத்து கூட்டத்தொடர் வரும் 21-ம் தேதி வியாழன் அன்று கூடும் என சட்டசபை செயலாளர் அறிவித்துள்ளார். அன்று காலை 2016-2017-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக 6-வது முறையாக ஜெயலலிதா பதவியேற்றார். அவர் மீண்டும் முதல்வராக பதவியேற்ற பின்னர் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும்.
அதிமுக செயற்குழு கூட்டம் சென்னை உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
கூட்டத்துக்கு அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை வகிக்கிறார். இதில் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
இன்று தமிழகத்தின் 15-வது சட்டப்பேரவை தொடங்குகிறது. பேரவையில் காலை 11 மணிக்கு ஆளுநர் கே.ரோசய்யா ஆங்கிலத்தில் உரையாற்றுகிறார். இதில் பல புதிய திட்டங்கள், அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது.
தமிழக சட்டசபை கூட்டம் நாளை காலை 11 மணிக்கு கூட உள்ளது. கவர்னர் ரோசைய்யாவின் உரையாற்றலுடன் இக்கூட்டம் துவங்க உள்ளது. முதல்வர் ஜெயலலிதா அரசின் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்ப்பார்க்கின்றனர்.
நாளை சட்டப் பேரவை கூட்டத்தொடர் தொடங்குகிறது. இந்நிலையில் கருணாநிதி தலைமையில் இன்று மாலை திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றவுள்ளது.
இந்த கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. இதில் வெற்றிபெற்ற அனைத்து எம்.எல்.ஏக்களும் பங்கேற்கின்றனர். திமுகவின் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக முதன்முறையாக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் சட்டப் பேரவையில் எப்படி செயல்பட வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்பது குறித்து விரிவாகப் பேச உள்ளனர்.
தமிழக சட்டசபை கூட்டம் நாளை காலை 11 மணிக்கு கூட உள்ளது. கவர்னர் ரோசைய்யாவின் உரையாற்றலுடன் இக்கூட்டம் துவங்க உள்ளது. முதல்வர் ஜெயலலிதா அரசின் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்ப்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் தற்போது பதவியேற்றுள்ள சட்டசபையின் முதல் கூட்டம் மே 25-ம் தேதி கூடியது. அன்று முதல்வராக அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா பதவியேற்றார் மற்றும் புதிய உறுப்பினர்களின் பதவியேற்றனர்.
தமிழகத்தில் கடந்த மாதம் 15-வது சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்தது. அதிக இடங்களை கைப்பற்றிய அ.தி.மு.க வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் தலைமையில் புதிய அமைச்சரவை கடந்த மாதம் 23-ம் தேதி பதவியேற்றது. அதனையடுத்து 25-ம் தேதி சட்டப்பேரவை கூடியது. அப்போது சட்டபேரவையின் தற்காலிக தலைவரான செம்மலை முன்னிலையில் முதல்வர் உட்பட அனைவரும் பதவியேற்றனர்.
தமிழகத்தில் கடந்த மே 16ம் தேதி இரண்டு தொகுதிகளை தவிர 232 தொகுதிகளில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. தமிழகத்தில் சராசரியாக பதிவான வாக்குப்பதிவு 73.76 சதவீதம் ஆகும்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பல முனைப் போட்டி இருந்தது. ஆனாலும் அதிமுக, திமுக என இரண்டு திராவிடக் கட்சிகளுக்கு மட்டுமே முன்னிலை பெற்றன.
15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகர் 'செம்மலை' முன்னிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்றனர்.
இதற்கு முன்பு எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவைக்குள் நுழைந்ததும் திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி அவரை உற்சாகத்துடன் வரவேற்றனர்.
70 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரகாண்ட் மாநில சட்டசபையில் காங்கிரசுக்கு 36 எம்.எல்.ஏ.க்களும், பா.ஜனதாவுக்கு 28 எம்.எல்.ஏ.க்களும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு 6 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். முதல்–மந்திரியாக ஹரிஷ்ராவத் பதவி வகித்து வந்தார். அவருக்கு எதிராக முன்னாள் முதல்–மந்திரி விஜய் பகுகுணா தலைமையில் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் போர்க்கொடி உயர்த்தினர். இவர்கள் 9 பேரும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுடன் சேர்ந்து சட்டசபையில் கடந்த மாதம் அரசின் நிதி மசோதாவுக்கு எதிராக குரல் கொடுத்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.