ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுதேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தல்கள் நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது!
இலவச திட்டங்கள் பலவற்றின் மூலம் வாடிக்கையாளர்களின் மனதில் தங்களுக்கென ஓர் இடத்தினை பிடித்திருக்கும் ரிலையன்ஸ் நிறைவனம் தற்போது ரூ.500-க்கு Set-top பாக்ஸினை அறிமுகம் செய்யவுள்ளது!
இந்தியாவின் மிக நீளமான பாலத்தை பிரதமர் மோடி, அசாமில் இன்று திறந்து வைத்தார்.
தின்சுகியா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தோலா - சதியா பாலம், பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே 9.15 கி.மீ., தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிக நீளமான பாலம் பிரம்மபுத்திரா நதியில் லோகித் ஆற்றில் கட்டப்பட்டுள்ளது. அசாம் - அருணாச்சலபிரதேசத்தை இணைக்கும் வகையில் தோலா சாடிய பாலம் கட்டப்பட்டுள்ளது.
கார் மூலம் பாலத்தில் பயணித்த மோடி, காரிலிருந்து இறங்கி, பாலத்தில் நடந்து சென்று பார்வையிட்டார்.
தலாய் லாமாவின் இந்திய வருகைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 6 இடங்களின் பெயர்களை சீனா மாற்றி அறிவித்துள்ளது.
இந்திய-சீன எல்லையில் உள்ள 3488 கி.மீ., தூரம் வரையிலான பகுதியை 1962 போரின் போது சீனா கைப்பற்றியது. இந்தியாவால் அருணாச்சல பிரதேசம் என அழைப்படும் பகுதியை சீனா தெற்கு திபெத் என்றே அழைத்து வருகிறது.
“சீனாவுக்கு எதிராக, இந்தியா என்னை ஒருபோதும் பயன்படுத்தியதில்லை” என, திபெத்தை சேர்ந்த, புத்த மதத் தலைவர் ‘தலாய் லாமா’ கூறியுள்ளார்
இந்தியாவின் மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதன் காரணமாக திபெத் ஆன்மிக தலைவர் தலாய் லாமாவை அருணாச்சல பிரதேசத்துக்குள் அனுமதிக்ககூடாது என இந்தியா வுக்கு சீனா எச்சரிக்கை விடுத்தது.
அருணாச்சல பிரதேசத்தை ஓட்டியுள்ள எல்லை வரையறை தொடர்பாகவே இரு நாட்டுக்கும் இடையே சர்ச்சை நிலவி வருவதாகவும், இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கமான அருணாச்சல பிரதேசத்தை முழுமையாக சீனா உரிமை கோர முடியாது என்றும் மத்திய அரசு தெரிவித்தது.
பாலியல் தொந்தரவு புகாரில் சிக்கிய மேகாலயா ஆளுநரான தமிழகத்தைச் சேர்ந்த சண்முகநாதன் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிப்பதாக பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக முதல்-மந்திரி பெமா காண்டு கட்சியில் இருந்து அதிரடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரோடு துணை முதல்- மந்திரி சவ்னாமேயன் மற்றும் 5 எம்.எல்.ஏ.க்களும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
அருணாச்சல பிரதேசத்தின் முதல்-மந்திரி பிமா காண்டு தலைமையில் 43 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சியில் இருந்து விலகினர்.
அருணாச்சல பிரதேசம் மாநில முதல்-மந்திரி பிமா காண்டு தலைமையில் 43 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சியில் இருந்து விலகிவிட்டனர். அவர்கள் அருணாச்சல பிரதேசம் மக்கள் கட்சியில் இணைந்துவிட்டனர். காங்கிரஸ் கட்சிக்கு இப்போது ஒரேஒரு உறுப்பினர் மட்டுமே உள்ளார், அவர் முன்னாள் முதல்வர் நபம் துகி.
வடகிழக்கு மாநிலங்களில் பிரமோஸ் ஏவுகணையை நிறுவ இந்தியா முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா, இந்த நடவடிக்கை எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் நிலைத்தன்மையில் எதிர்மறை சூழ்நிலையை ஏற்படுத்தும் என கூறியுள்ளது.
அஸ்ஸாம் மாநில பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ரத்னேஸ்வர் மோரனின் மகன், குல்தீப் மோரன் என்பவரை கடந்த 1-ம் தேதி, அருணாச்சலப் பிரதேசத்தின் சங்லாங் பகுதியில் உல்ஃபா அமைப்பினர் கடத்திச் சென்றனர்.
இந்நிலையில், அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றால் 1 கோடி ரூபாய் தர வேண்டும் எனவும், பணம் தராவிட்டால், குல்தீப்பை சுட்டுக் கொன்று விடுவோம் எனவும் உல்ஃபா அமைப்பினர் மிரட்டல் விடுத்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.