ஷில்லாங்: பாலியல் தொந்தரவு புகாரில் சிக்கிய மேகாலயா ஆளுநரான தமிழகத்தைச் சேர்ந்த சண்முகநாதன் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிப்பதாக பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் மேகாலயா மாநில கவர்னராக வி.சண்முகநாதன் நியமிக்கப்பட்டார். இவர், தமிழ்நாட்டை சேர்ந்தவர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இவர் அருணாசலபிரதேச கவர்னர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார்.
இந்நிலையில், மேகாலயா கவர்னர் மாளிகை ஊழியர்கள், கவர்னர் மாளிகையின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாக புகார் கூறினர். சும்மார் 100 ஊழியர்களுக்கு மேற்பட்டோர் கையெழுத்திட்டு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு மேற்பட்டோர் 5 பக்க கடிதம் ஒன்றை அனுப்பினர்.
இதையடுத்து, கவர்னர் சண்முகநாதன் தனது பதவியை நேற்று இரவு ராஜினாமா செய்தார். இதை மேகாலயா அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
ராஜ்பவனை இளம்பெண்கள் கிளப்பாகவே சண்முகநாதன் மாற்றியது; சின்மோயி தேகா என்ற பெண்ணுடனான நெருக்கம் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் அதில் இடம்பெற்றிருந்தன. இதையடுத்து சண்முகநாதன் ராஜினாமா செய்ய கோரி மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் போராட்டங்கள் வெடித்தன.
இந்நிலையில் சண்முகநாதன், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என்று பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.