பிரமோஷ் ஏவுகணை நிறுவ எதிர்ப்பு தெரிவித்த சீனாவுக்கு இந்தியா பதிலடி

Last Updated : Aug 23, 2016, 08:31 PM IST
பிரமோஷ் ஏவுகணை நிறுவ எதிர்ப்பு தெரிவித்த சீனாவுக்கு இந்தியா பதிலடி title=

வடகிழக்கு மாநிலங்களில் பிரமோஸ் ஏவுகணையை நிறுவ இந்தியா முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா, இந்த நடவடிக்கை எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் நிலைத்தன்மையில் எதிர்மறை சூழ்நிலையை ஏற்படுத்தும் என கூறியுள்ளது.

இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீன ராணுவத்தின் பத்திரிகையில் வெளியிடப்பட்ட செய்தியில், எல்லையில், பிரமோஸ் ஏவுகணையை நிறுவுவது, சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் மற்றும் யுனான் மாகாணங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த ஏவுகணையை நிறுவுவதால், இரு நாட்டு உறவில் போட்டி மற்றும் முரண்பாடு ஏற்படுவதுடன், இரு நாட்டு உறவில் நிலவும் சூழலில் எதிர்மறை சூழ்நிலையை ஏற்படும் எனத்தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், சீனாவுக்கு பதிலடி கொடுத்துள்ள இந்திய ராணுவம், எங்கள் அச்சுறுத்தல் உணர்வும், பாதுகாப்பு அம்சங்களும் எங்களின் சொந்த விவகாரம். இந்த பிரச்சினைக்கு எங்கள் பிராந்தியத்திற்குட்பட்ட பகுதியில் படைகளை குவித்து எவ்வாறு தீர்வு காண்கிறோம் என்பதை பற்றி வேறு யாரும் கவலைப்பட தேவையில்லை என்று பதிலடி கொடுத்துள்ளது.

Trending News