இந்தியாவின் நீளமான பாலத்தை மோடி திறந்து வைத்தார்

Last Updated : May 26, 2017, 11:56 AM IST
இந்தியாவின் நீளமான பாலத்தை மோடி திறந்து வைத்தார் title=

இந்தியாவின் மிக நீளமான பாலத்தை பிரதமர் மோடி, அசாமில் இன்று திறந்து வைத்தார். 

தின்சுகியா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தோலா - சதியா பாலம், பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே 9.15 கி.மீ., தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவின் மிக நீளமான பாலம் பிரம்மபுத்திரா நதியில் லோகித் ஆற்றில் கட்டப்பட்டுள்ளது.  அசாம் - அருணாச்சலபிரதேசத்தை இணைக்கும் வகையில் தோலா சாடிய பாலம் கட்டப்பட்டுள்ளது.

கார் மூலம் பாலத்தில் பயணித்த மோடி, காரிலிருந்து இறங்கி, பாலத்தில் நடந்து சென்று பார்வையிட்டார். 

இந்த பாலம் திறக்கப்படுவதன் மூலம் அசாம், அருணாச்சல பிரதேசம் இடையேயான பயணம் நேரம் 4 மணிநேரம் வரை குறையும்.

இதனால் நாள் ஒன்றுக்கு 10 லட்சம் மதிப்பிலான எரிபொருட்கள் மிச்சமடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று இந்த பாலத்தால் இரு மாநிலங்களுக்கிடையேயான வர்த்தக போக்குவரத்திற்கும் மேம்படும்.

2011-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கட்டுமானப் பணிகள் 7 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவடைந்தன. இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி இந்த பாலத்தை இன்று திறந்து வைத்தார். 

Trending News